விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே..!

படம்:உரிமைக்குரல்
இசை:மெல்லிசை மன்னர்
இயக்கம்:ஸ்ரீதர்
வரிகள்:கண்ணதாசன்





விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே கதை எழுது...)

மனதில் வடித்து வைத்த சிலைகள்- அதில்
மயக்கம் பிறக்க வைத்த கலைகள்
மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும்
வானத்தை யார் மூடக்கூடும்
உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே கதை எழுது...)

கோவில் பெண் கொண்டது
தெய்வம் கண் தந்தது
பூஜை யார் செய்வது - இந்தப்
பூவை யார் கொள்வது
ஊமைக்கு வேறேது பாஷை?
உள்ளத்தில் ஏதேதோ ஆசை
உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே கதை எழுது...)

தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது
காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது
எண்ணத்தில் என்னென்ன தோற்றம் - என்
நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம்
உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே கதை எழுது...)

சின்னச் சின்ன ரோஜாப்பூவே

குழந்தைகள் தின சிறப்புப் பாடலாக மலர்கிறது
இந்தப் பாடல்


பூவிழி வாசலிலே திரைப்படத்திலிருந்து மிக
அழகான இந்தப் பாடல் கானகந்தர்வனின் குரலில்.




சின்னச்சின்ன ரோஜாப்பூவே
செல்லகண்ணே நீ யாரு?
தப்பி வந்த சிப்பி முத்தே
உன்னைப் பெத்த தாயாரு?

சொல்லிக்கொள்ள வாயுமில்லை
அள்ளிக்கொள்ள தாயுமில்லை
ஏனோ சோதனை?
இள நெஞ்சில் வேதனை

சின்னச்சின்ன ரோஜாப்பூவே
செல்லகண்ணே நீ யாரு?


சின்ன பிஞ்சு நெஞ்சுக்குள்ளே
என்ன? என்ன? ஆசையுண்டோ?
உள்ளம் தன்னை மூடிவைத்த
தெய்வம் வந்தால் சொல்லும் இங்கே!
ஊரும் இல்லை பேரும் இல்லை.
உண்மைசொல்லை யாரும் இல்லை.


நீயும் இனி நானும் ஒரு ஜீவன் தானடா!
சோலை கிளி போலே என்
தோளில் ஆடடா!
இது பேசா ஓவியம்
இதில் சோகம் ஆயிரம்


சின்னச்சின்ன ரோஜாப்பூவே
செல்லகண்ணே நீ யாரு?
தப்பி வந்த சிப்பி முத்தே
உன்னைப் பெத்த தாயாரு?


கண்ணில் காணும் போது
எண்ணம் எங்கோ போகுதய்யா
என்னைவிட்டு போன பிள்ளை
இங்கே உந்தன் கோலம் கொண்டு
வந்ததன்று எண்ணுகிறேன்
வாழ்த்து சொல்லி பாடுகிறேன்

கங்கை நீ என்றால் கரை
இங்கு நானடா
வானம் நான் என்றால்
விடிவெள்ளி நீயடா

என் வாழ்வில் நிம்மதி
அது உந்தன் சன்னதி

சின்னச்சின்ன ரோஜாப்பூவே
செல்லகண்ணே நீ யாரு?
தப்பி வந்த சிப்பி முத்தே
உன்னைப் பெத்த தாயாரு?
சொல்லிக்கொள்ள வாயுமில்லை
அள்ளிக்கொள்ள தாயுமில்லை
ஏனோ சோதனை
இள நெஞ்சில் வேதனை

कहाँ सी आए भद्रा



Kahan Se Aye Badra
Kahan se aye badara
Ghulata jaye kajara
Kahan se aye badara
Ghulata jaye kajara

Palakon ke satarange deepak
Ban baithe aansu ki jhalar
Moti kaa anamolak heera
Mitti mein jaa Phisala
Kahan se ayee badara

Neend piya ke sang sidhari
Sapanon ki sukhi phulawari
Amrit hothon tak aate hi
Jaise vish mein badala
Kahan se aye badara

Utare megh yaa phir chhaye
Nirday jhonke agana badhaye
Barase hain ab tose sawan
Roe man hai pagala
Kahan se aye badara



1981 ஆண்டு வெளிவந்த ”சஷ்மே பத்தூர்”
திரைப்படத்திலிருந்து இந்தப் பாடல்.

இந்து ஜெயினின் வரிகளுக்கு
இசையூட்டியது ராஜ் கமல்.

பாடியது யேசுதாஸ்,ஹைமந்தி சுக்லா

இசைச் சங்கமம்

சில காரணத்தால் கானக்கந்தர்வன் யேசுதாஸ்
இளையராஜா அவர்களின் இசையில் பாடாமல்
இருந்தார்.

இருவரும் பல மெலடி மெட்டுக்களை தந்தவர்கள்.
நினைவை விட்டு நீங்காத பாடல்கள் இன்றும்
நம் நினைவில் தாலாட்டிக்கொண்டிருக்கின்றன்.

இளையராஜாவின் இன்னிசையில் யேசுதாஸ்
அவர்கள் பாடவிருக்கிறார்.




இயக்குனர் மிஷ்கின் அவர்களின் அடுத்த படமாகிய
நந்தலாலாவில் தான் இவர்களின் இசைச்சங்கமாகப்போகிறது.

காதுகளை தீட்டிக்கொண்டு காத்திருங்கள். மெலடி
மெட்டொன்று அதிவிரைவில் வரப்போகிறது.

இளையராஜா அவர்களின் இசையில் யேசுதாஸ் அவர்கள்
பாடிய முந்நாள் பாடலொன்று இந்த நேரத்தில் உங்களுக்காக.

ரெட்டை வால் குருவி திரைப்படத்திலிருந்து
ராஜ ராஜச் சோழன் நான்.

பிரமதவனம் வேண்டும்......

ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா எனும் மலையாளத்திரைப்படத்தில்
யேசுதாஸின் இந்தப்பாடல் மிக அருமை.


Get this widget | Track details | eSnips Social DNA

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்.....




Get this widget | Track details | eSnips Social DNA



அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு.

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி
தன்மெய் வருத்தக் கூலி தரும்.

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்

அன்னை இதயமாக அன்பு வடிவமாக
வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம்.

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்.



கடவுளிலே கருணை தன்னைக் காணலாம்
அந்தக் கருணையிலே கடவுளையும் காணலாம்

நல்லமனசாட்சியே தேவன் அரசாட்சியாம்
அங்கு ஒரு போதும் மறையாது அவன் காட்சியாம்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்..



பாவமென்ற கல்லறைக்கு பலவழி
என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி
இந்த வழி ஒன்றுதான் எங்கள் வழி என்றுநாம்
நேர்மை தவறாமல் நடை போடுவோம்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்


இதயம் தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்...
இதயம் தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்

அந்த ஒளி காணலாம் சொன்ன வழி போகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்




படம்: பல்லாண்டு வாழ்க
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

இசை: கே.வி.மகாதேவன்

வங்காளக் கடலே!



வங்காளக் கடலே என்ன உன்னாச விடலை
எங்கக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே
என்னை மாமான்னு தான் கொஞ்சிடனும் மானே
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே!


வங்காளக் கடலே என்ன உன்னாச விடலை
எங்கக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே
என்னை மாமான்னு தான் கொஞ்சிடனும் மானே
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே!

அடி வங்காளக் கடலே என்ன உன்னாச விடலை
எங்கக்காளின் மகளே ....


போட்டானே பாணம் பொன்மாலை நேரம்

ஆத்தாடி ராவும் பகலும் தூக்கம் வரலை
பாலோடு தேனும் எப்போதும் வேணும்
அம்மாடி நானும் கேட்டு நீதான் தரலை


கள்ளூரும் பானே உன்னாலத்தானே
உன்னாம நானே திண்டாடுறேன்
அடி சோறேது நீரேது உன் ஞாபகம்
இனி தூங்காது தாங்காது என் வாலிபம்.

வங்காளக் கடலே என்ன உன்னாச விடலை
எங்கக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே
என்னை மாமான்னு தான் கொஞ்சிடனும் மானே
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே!

வங்காளக் கடலே என்ன உன்னாச விடலை
எங்கக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே
என்னை மாமான்னு தான் கொஞ்சிடனும் மானே
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே!

வங்காளக் கடலே என்ன உன்னாச விடலை
எங்கக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே
என்னை மாமான்னு தான் கொஞ்சிடனும் மானே
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே!

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

கானக் கந்தர்வனின் குரலில் இந்தப் பாடல்
அனைவருக்கும் பிடித்தமான ஒன்று
கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகள்.
எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின்
இசையமைப்பில் மனமத லீலை திரைப்படத்திலிருந்து
இதோ இந்தப் பாடல்




மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்.

மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்.
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.



இரவில் நிலவொன்று உண்டு
உறவினில் சுகமொன்று உண்டு
இரவில் நிலவொன்று உண்டு
உறவினில் சுகமொன்று உண்டு

மனைவியின் கனவொன்று உண்டு
எனக்கது புரிந்தது இன்று.

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்.


பொறுத்தம் உடலில் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
பொறுத்தம் உடலில் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்

கணவனின் துணையோடுதானே
காமனை வென்றாக வேண்டும்.

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.

கவிஞன் கண்டாலே கவிதை
காண்பவன் கண்டாலே காதல்
கவிஞன் கண்டாலே கவிதை
காண்பவன் கண்டாலே காதல்

அழகினை புரியாத பாவம்
அருகினில் இருந்தென்ன லாபம்.

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்.


மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.

Jaaneman jaaneman tere do nayan




Get this widget | Track details | eSnips Social DNA





(Jaaneman jaaneman tere do nayan
Chori chori leke gaye dekho mera man
Jaaneman jaaneman jaaneman
Mere do nayan, chor nahi sajan
Tumse hi khoya hoga kahi tumhaara man
Jaaneman jaaneman jaaneman) -2

(Tod de dilo ki doori, aisi kya hai majboori
Dil dil se milne de
Jaa, abhi to huwi hai yaari, abhi se hi beqaraari
Din to zara dhhalne de) -2
Yahi sunte, samajhte, guzar gaye jaane kitne hi saawan
Jaaneman jaaneman...
Mere do nayan…

(Sang sang chale mere, maare aage peechhe phere
Samjhu main tere iraade
Doshh tera hai ye to, har din jab dekho
Karti ho jhoothhe waade) -2
Tu na jaane, diwaane, dikhaau tujhe kaise main ye dil ki lagan
Jaaneman jaaneman ...
La la ..., Mere do nayan…

(Chhedenge kabhi na tumhe, zara batlaado hame,
Kab tak ham tarsenge
Aise ghabhraao nahi, kabhi to kahi na kahi
Baadal ye barsenge) -2
Kya karenge baraske, ke jab murjhaayega ye saara chaman
Jaaneman jaaneman...
La la ..., Mere do nayan...



choti si baath.

yesudas, Asha bonsle

மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதம்மா

பாக்யராஜ் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த மொளன் கீதங்களி
திரைப்படத்தில் யேசுதாஸ், ஜானகி குரலில் இந்தப் பாடல்
அருமையாக இருக்கும்.

Get this widget | Track details | eSnips Social DNA








மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதம்மா.... ம் ம்ம்
அது உக்காந்து பேசையிலே தேனு
உள்ளூர ஊருதம்மா... ஆஹா..
அது ஏந்தான் புரியலையே அதை
நான் தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு
உன்னாலே இன்னேரம் உண்டானது

மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதய்யா.... ம் ம்ம்
அது உக்காந்து பேசையிலே தேனு
உள்ளூர ஊர்றுதய்யா... ஆஹா..
அது ஏந்தான் புரியலையே அதை
நான் தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு
உன்னாலே இன்னேரம் உண்டானது
மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதம்ம....


மேற்க்காலே போகின்ற மேகங்களே
மண்ணில் வாருங்களேன் மழை
தாருங்களேன் உடல் சூடாச்சி பாருங்களேன்

மேற்க்காலே போகின்ற மேகங்களே
மண்ணில் வாருங்களேன் மழை
தாருங்களேன் உடல் சூடாச்சி பாருங்களேன்


மழை மேகம் நானாகவா? மலர் தேகம் நீராட்டவா?
மடி ஏந்தி தாலாட்டவா? மனமார சீராட்டவா?
வெரும் ஏக்கம் ஆகாதம்ம விட்டு போகாதம்ம
நான் கொஞ்சாம தீராதம்மா..... ஆமா....

மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதம்மா
அது உக்காந்து பேசையிலே தேனு
உள்ளூர ஊருதம்மா



கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும்
ஒரு பூமாலையும்
திரு பொனூஞ்சலும் அடி நான்
காண நாளாகுமோ?
கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும்
ஒரு பூமாலையும் திரு பொனூஞ்சலும்
அடி நான் காண நாளாகுமோ?


திருனாளும் தானே வரும்
உனைதேடி தேனே வரும்
வரும்போது ஓலை வரும்
அது வந்தா மாலை வரும்
அட நானும் உன்போலத்தான்
அத கொண்டாடத்தான்
எதிர்பார்த்தேனே நன்னாளை தான்... ஆமா..

மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதம்மா
அது உக்காந்து பேசையிலே தேனு
உள்ளூர ஊருதய்யா!
அது ஏந்தான் புரியலையே அதை
நான் தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு
உன்னாலே இன்னேரம் உண்டானது
மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதம்ம....

தானன்னா தனன்னா! தான தானன்ன தனன்னா




படம்: மௌன கீதங்கள்
இசை: கங்கை அமரன். *
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், S ஜானகி

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா...!

Chinna Chiru Kiliye -

ஏழாவது மனிதன் திரைப்படத்தில் வரும் இந்தப் பாடல்
யேசுதாஸ், சுவர்ணலதா குரலில் கேட்டு மகிழலாம்.


சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே
பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே
அள்ளி அணைத்திடவே என் முன்னே
தேனே.. ஆடி வரும் தேனே...
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

உச்சிதனை முகர்ந்தால் கருவம்
ஓங்கி வளருதடி
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடி..
மேனி சிலிர்க்குதடி..

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடி..
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடி.
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா
உன்மத்தம் ஆகுதடி (உன்னைத் )

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

பாயுமொளி நீயெனக்கு பார்க்கும் விழி நானுனக்கு




பாயுமொளி நீயெனக்கு
பார்க்கும்விழி நானுனக்கு
தோயும் மது நீயெனக்கு
தும்பியடி நானுனக்கு
வாயுரைக்க வருகுதில்லை
வாழி நின்றன் மேன்மையெல்லாம்
தூய சுடர் வானொளியே
சுரையமுதே கண்ணம்மா.....

வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு
வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு
பூணும் வடம் நீயெனக்கு
புது வயிரம் நானுனக்கு

வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு
பூணும் வடம் நீயெனக்கு
புது வயிரம் நானுனக்கு

வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு

வானமழை நீயெனக்கு
வண்ண மயில் நானுனக்கு
ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ
வானமழை நீயெனக்கு
வண்ண மயில் நானுனக்கு
பானமடி நீயெனக்கு
பாண்டமடி நானுனக்கு
கான ஒளி வீசுதடி நங்கை நின்றன் சோதி முகம்
ஊனமறு நல்லழகே
நல்லழகே
ஊறுசுவையே கண்ணம்மா....


காதலடி நீயெனக்கு
காந்தமடி நானுனக்கு
வேதமடி நீயெனக்கு
வித்தையடி நானுனக்கு
போதமுற்றபோதினிலே பொங்கி வரும் தீஞ்சுவையே
நாதவடிவானவளே
நாதவடிவானவளே... நல்ல உயிரே... கண்ணம்மா.

வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு


படம்: ஏழாவது மனிதன்(1982)
பாடல் வரிகள்: பாரதியார்
இசை: எல்.வைத்தியநாதன்.

ஓடி விளையாடு பாப்பா.

மகாகவி பாரதியாரின் அருமையானப் பாடல்.
ஏழாவது மனிதன் திரைப்படத்தில் யேசுதாஸின்
இனிமையான குரலில் கேட்டு மகிழுங்கள்.




ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வைய்யாதே பாப்பா.


ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வைய்யாதே பாப்பா.


காலை எழுந்ததும் படிப்பு
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு
என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா


சின்னஞ்சிறு குருவி போலே
நீ திரிந்து பறந்து வா பாப்பா
வண்ண பறவைகளைக்கண்டு நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வைய்யாதே பாப்பா.



படம்: ஏழாவது மனிதன் (1982)
இசை:எல். வைத்தியநாதன்
பாடல் வரிகள்: மகாகவி சுப்ரமணிய பாரதியார்.

Sai Saranam (సాయి శరణం)- சாயி சரணம் பாபா சரணம்

சீரடி சாயிபாபாவின் புகழைப்பாடும் இந்தத் தெலுங்குப் பாடல்
யேசுதாஸ் அவர்களின் குரலின் இனிமையால்
நம்மை பக்தியில் ஆழ்த்துகிறது.

raagaa.com



http://www.mediafire.com/?75mz1e0st1p



Hey… Pandurangaa… Hey Pandarinaadhaa
Saranama… saranam… saranam…

Sai saranam Baba saranu saranam
Sai charanam ganga yamuna sangama samaanam
(Ye kshetramaina teerdhamaina Sai..ee
Maa Pandurangadu karunaamayudu Sai…ee) - 2

Sai saranam Baba saranu saranam
Sai charanam ganga yamuna sangama samaanam

Vidya buddulu vedina balaku agupinchadu Vigneswarudai
Pilla papala korina vaarini karuninchadu Sarveswarudai
Tiragali chakram tippi vyaadini arikattaadu Vishnuroopudai
Magasaa syamaaku maarutigaanu mari kondariki Dattatreyudugaa…
Yadbhavam tadbhavatani darsanamichchadu…
Danyula chesaadu…

Sai saranam Baba saranu saranam
Sai charanam ganga yamuna sangama samaanam
Ye kshetramaina teerdhamaina Sai..ee
Maa Pandurangadu karunaamayudu Sai…ee

Sai saranam Baba saranu saranam
Sai charanam ganga yamuna sangama samaanam

Penuthupaanu taakidiloo alamatinchu deenulanu…
Aadharinche prananaadha dhaarudai…
Ajnaamu alumukonna andhulanu cheradeesi…
Asalu choopu ichchinaadu vaidyudai…
Veedhi veedhi bichametti vaari vaari papamulanu
Puchukoni mokshamichu siddudai…
Puchukonna paapamulanu prakshalana chesukonenu
Dowtya kriya vidyato suddudai…
Angamulanu veru chesi khanda yoga saadanalo
Aatma sekthi chaatinaadu siddudai…

Jeeva raasulannitiki Sai saranam…
Sai saranam… - chorus
Divya gnana sadhanaku Sai saranam…
Sai seranam… - chorus
Aastikulaku Sai saranam… Naastikulaku Sai saranam…
Aastikulaku Sai saranam… Naastikulaku Sai saranam… - chorus
Bhaktiki Sai saranam… Muktiki Sai saranam…
Bhaktiki Sai saranam… Muktiki Sai saranam… - chorus

Sai saranam Baba saranu saranam
Sai charanam ganga yamuna sangama samaanam
(Ye kshetramaina teerdhamaina Sai..ee

சாயி பாபா.

அலை பாயுதே கண்ணா.. என் மனம் மிக அலை பாயுதே.





அலைபாயுதே கண்ணா....
அலைபாயுதே கண்ணா

என் மனம் மிக அலைபாயுதே.. கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே.. கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே கண்ணா

அலைபாயுதே....

வேணு கானமதில் அலைபா
என் மனம் மிக அலைபாயுதே
மோகன வேணு கானமதில் அலைபாயுதே

கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
ஆனந்த மோகன வேணு காணமதில்
அலைபாயுதே...
உன் ஆனந்த மோகன வேணு காணமதில்
அலைபாயுதே.....


கண்ணா......கண்ணா..


நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று

நேரமாவதறியாமலே மிக வினோதமான
முரளீதர
நேரமாவதறியாமலே மிக வினோதமான
முரளீதர



என் மனம் அலை பாயுதே.
என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு காணமதில்
அலைபாயுதே.....

கண்ணா......கண்ணா..



தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே

உன் திக்கை நோக்கி என்னிரு புருவம் நெரியுதே

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
உன் திக்கை நோக்கி என்னிரு புருவம் நெரியுதே


கனிந்த உன் வேணுகானம் ..ஆஅ...ஆஅ..
கனிந்த உன் வேணுகானம்
காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே

கனித்த மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு
அளித்து மகிழ்த்த வா
கனித்த மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு
அளித்து மகிழ்த்த வா


ஒரு தனித்த வனத்தில் அணைத்து
எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா

கனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழையென களித்தவா

கனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழையென களித்தவா

கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதரமாதருடன் நீ களிக்கவோ
கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதரமாதருடன் நீ களிக்கவோ


இது தகுகோ.. இது முறையோ..
இது தருமம் தானோ....

குழல் ஊதிடும் பொழுது ஆடிடும் குழல்கள் போலவே
மனது வேதனை மிகவூது

அலைபாயுதே கண்ணா என் மனம் மிக
அலைபாயுதே.
உன் ஆனந்த மோகன வேணுகாணமதில்
அலைபாயுதே.

கண்ணா.. கண்ணா.. கண்ணா...

கா கரூன் சஜனி ஆயேன பாலமு.......

சுவாமி ஹிந்தி திரைப்படத்தில் இந்தப் பாடல்
மனதுக்கு இதமாக இருக்கும்.

கானகந்தர்வனின் குரலில் இதோ
அந்தப்பாடல்.




kaa karu sajanee, aaye naa baalam
khoj rahee hain piyaa, paradesee aakhiyaan

jab bhee koee aahat howe, manawaa moraa bhaage
dekho kaee toote nahee, pareet ke ye dhaage
hai matawaaree, pareet humaaree chhupe naa chhupaaye
saawan ho tum main hoo toree badareeyaa

bhor bhayee, saanz dhalee, samay ne lee angadaee
ye jag saaraa neend se haaraa, mohe neend naa aayee
mai ghabaraoo, dar dar jaaoo, aaye wo naa aaye
raadhaa bulaaye kahaa, khoye ho kanhaiyaa

அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன்.




அழைக்கிறான் மாதவன் ஆநிரை மேய்த்தவன்
மணிமுடியும் மயிலிறகும்
எதிர் வரவும் துதிபுரிந்தேன்
மாதவா, கேசவா, ஸ்ரீதரா ஓம்.


தேடினேன் தேவ தேவா! தாமரைப் பாதமே!
வாடினேன் வாசுதேவா! வந்தது நேரமே!

ஞான வாசல் நாடினேன்,
வேதகானம் பாடினேன்.
கால காலம் நானுனை.

தேடினேன் தேவ தேவா! தாமரைப் பாதமே!


காதில் நான் கேட்டது வேணுகானம்ருதம்.
கண்ணில் நான் கண்டது கண்ணன் பிருந்தாவனம்.

மாயனே நேயனே மாசில்லாத தூயனே
ஆத்ம ஞானம் அடைந்த பின்னும்
தேடினேன் தேவ தேவா! தாமரைப் பாதமே


குருவே சரணம்! குருவே சரணம்!
குருவே சரணம்! குருவே சரணம்!

ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா

ராகவேந்திரா ராகவேந்திரா

ராகவேந்திரா ராகவேந்திரா
ராகவேந்திரா ராகவேந்திரா


குருவே சரணம்! குருவே சரணம்!
குருவே சரணம்! குருவே சரணம்!


ஞானத் திருமேனி காணவரமேண்டுமே..
சீத பூவண்ணக் பாதம் தொழவேண்டுமே...
பக்தன் வரும்போது பாதைத் தடையானதேன்?
காட்டு பெருவெள்ளம் ஆற்றில் உருவானதேன்
தாயாகி தயை செய்யும் தேவா
தடை நீங்க அருள் செய்ய வா வா

நான் செய்த பாவம் யார் தீர்க்க கூடும்
நீ வாழும் இடம் வந்து நான் சேர வேண்டும்

குருவே சரணம்! குருவே சரணம்!
குருவே சரணம்! குருவே சரணம்!

ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா

ராகவேந்திரா ராகவேந்திரா
ராகவேந்திரா ராகவேந்திரா

`குருவே சரணம்! குருவே சரணம்!
குருவே சரணம்! குருவே சரணம்!

குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா

குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா

குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா
குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா

ராகவேந்திர ராகவேந்திர.

அழைக்கிறான் மாதவன் வீடியோ காண.

ஒரு பெண்புறா கண்ணீரில் தள்ளாட..!

படம் : அண்ணாமலை
இசை : தேவா
குரல் : கே.ஜே.யேசுதாஸ்





ஒரு பெண்புறா
கண்ணீரில் தள்ளாட என்னுள்ளம் திண்டாட
என்ன வாழ்க்கையோ..!
சுமைதாங்கி சுமையானதே..!
எந்தன் நிம்மதி போனதே...!
மனம் வாடுதே

(ஒரு பெண்புறா...)

கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன்
தூக்கம் கண்ணைச் சொக்குமே அது அந்தக்காலமே..!
மெத்தைவிரித்தும் சுத்தப் பன்னீர்த் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்தக்காலமே..!
என் தேவனே ஓ தூக்கம் கொடு..!
மீண்டும் அந்த வாழ்க்கைக் கொடு..!
பாலைவனம் கடந்து வந்தேன்
பாதங்களை ஆற விடு

(ஒரு பெண் புறா...)

கோழி மிதித்து ஒருகுஞ்சு சாகுமா
அன்று பாடம் படித்தேன் அது பழைய பழமொழி
குஞ்சு மிதித்து இந்தகோழி நொந்ததே
இதை நெஞ்சில் நிறுத்து இது புதிய பழமொழி
ஆண்பிள்ளையோ சாகும்வரை..!
பெண்பிள்ளையோ போகும்வரை..!
விழியிரண்டும் காயும்வரை..!
அழுதுவிட்டேன் ஆனவரை..!

(ஒரு பெண் புறா...)

கல்யாணம் என்பது பூர்வ பந்தம்...!!

படம்: ப்ரியமானவளே
பாடியவர்: யேசுதாஸ்





(பாடல் மட்டும் கிடைக்கவில்லை. படத்திலிருந்து ஒரு
பகுதி மொத்தமும் தான் கிடைத்தது)



கார்யேசுதாசி, கரனேசு மந்திரி
போஜேசு மாதா, சயனேசு ரம்பா


கல்யாணம் என்பது பூர்வ பந்தம்
உடலோடுயிர் குடியேறிட வாழும் சொந்தம்
சம்சாரம் என்பது ஆதி அந்தம்
ஒன்றாகிடும் உறவாடிடும் அன்பால் என்றும்

எழேழு ஜன்மமே மணமாலை பந்தமே
ஆயிரம் காலமே வாழுமே!


(கல்யாணம் என்பது...)


வெளிச்சமாகும் வீடு பெண் விளக்கேற்றினால்
வெற்றியாகும் வாழ்வு பெண் வழிகாட்டினால்
விலகி போகும் மோகம் பெண் விரல் தீண்டினால்
தெய்வம் கூட இளகும் பெண் வரம் வேண்டினால்
இங்கு ஆணின் பின்பலம் என்றும் ஆகும் பெண்பலம்


நீ ஏது நான் ஏது இங்கே?
நம்மையெல்லாம் சுமந்தவள் யாரடா

(கல்யாணம் என்பது...)

ஆ..ஆ.....

தலைவன் கூடும் போது பெண் விருந்தாகிறாள்
தலைவன் வாடும்போது பெண் மருந்தாகிறாள்
தலைவன் கொஞ்சும் போது பெண் சேயாகிறாள்
தலைவன் துஞ்சும் போது பெண் தாயாகிறாள்

பெண்ணின் பெருமை சொல்லவா
கடல் போன்றதல்லவா
நீர் வாழ நீர் வார்க்கும் மேகம்
அதற்கொரு உவமை தான் பெண்மையே

கார்யேசுதாசி, கரனேசு மந்திரி
போஜேசு மாதா, சயனேசு ரம்பா.

அபுரூபமைனதம்மா ஆடஜென்மா....

பவித்ரபந்தம்- இந்தத் திரைப்படத்தில் யேசுதாஸ் அவர்கள்
பாடியிருக்கும் இந்தப்பாடல் மிக அருமையானது.
மனைவி தாயாக, சேவகியாக எப்படி
கணவனின் வாழ்வோடு இணைந்து இருக்கிறாள்
என்பதை சொல்லும் பாடல் இது.


இந்தப் பாடலுக்கு ஆந்திர அரசின் சிறந்த
விருதான நந்தி விருது வழங்கப்பட்டுள்ளது.

இதன் தமிழ் பதிப்புதான் ப்ரியமானவளே.

Karyeshu dasi, Karneshu mantri,
Roopeshu Lakshmi, kshameshu dharitri,
Bhojeshu matha, Shayaneshu ramba







Get this widget | Track details | eSnips Social DNA

41.நினைவாலே சிலை செய்து..!




படம் : அந்தமான் காதலி
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
குரல் : கே.ஜே.யேசுதாஸ் & வாணி ஜெயராம்


நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா...ஆ...ஆ..ஆ
திருக்கோவிலே ஓடி வா


நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா...ஆ...ஆ..ஆ
திருக்கோவிலே ஓடி வா

நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை
நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை
வேரின்றி மலரே ஏதம்மா
வேரின்றி மலரே ஏதம்மா

நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா!

ஐயா உன் நினைவேதான்
நான் பாடும் ராகங்கள்
அப்போதும் இப்போதும்
தப்பாத தாளங்கள்
ஐயா உன் நினைவேதான்
நான் பாடும் ராகங்கள்
அப்போதும் இப்போதும்
தப்பாத தாளங்கள்
கண்ணீரிலே நான் தீட்டினேன்
கன்னத்தில் கோலங்கள்
கன்னத்தில் கோலங்கள்

செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம்
செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம்
சம்சாரத் தேரில் நானேறி வந்தேன்
திருக்கோவிலே ஓடிவா!

ஆ...ஆ..ஆ..திருக்கோவிலே ஓடிவா!
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா!

முல்லைக்கு குழல் தந்த
பெண்மைக்குப் பெண்மை நீ
பிள்ளைக்குத் தோள் தந்த
அன்னைக்கு அன்னை நீ
முல்லைக்கு குழல் தந்த
பெண்மைக்குப் பெண்மை நீ
பிள்ளைக்குத் தோள் தந்த
அன்னைக்கு அன்னை நீ
அதிகாலையில் நான் கேட்பது
நீ பாடும் பூபாளம்

என் கண்கள் ரெண்டும்
பல்லாண்டு பாடி
என் கண்கள் ரெண்டும்
பல்லாண்டு பாடி
செவ்வானம் ஆனேன்
உன்னைத்தேடித் தேடி
திருக்கோவிலே ஓடிவா

ஆ...ஆ..ஆ..திருக்கோவிலே ஓடிவா!
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா!

ஆ...ஆ..ஆ..திருக்கோவிலே ஓடிவா!

40.யேசுதாஸ் யேசுதாஸாக...

2002 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படம்
”நந்தனம்”. இது பிரிதிவிராஜின் அறிமுகப் படம்.

இதில் யேசுதாஸ் கச்சேரி செய்வது
போன்ற ஒரு பாடல் இது.




ஸ்ரீல வசந்தம் ,

aa...aa....aa....
Sreelavasantham peeliyuzhinju
madhurayil pournamiyaayi (sreela)
gopee hrudhayam tharalithamaayi (gopee)
maadhava sangamamaayi
raadhaa maadhava sangamamaayi (sreela)

nin neelakannil naanam
mashiyezhuthum yaamam yaamam
ee maayakannan neeyaam
madhu nukarum neram neram
aakaasha kadambil viriyum
oru nakshathra kurunnum yamunayile
neerolam parappil theliyum
oru raathingal thidambum
sruthi murukum amrutha sangeetha
layavumonnaavum atheeya raasolsavam

Krishna nee bhegane vaaro(krishna)

ee sandhyaa raagam kaatil
chirakaniyum yaamam yaamam
ee venna kannan ninnil
veenaliyum neram neram
nin paattin swarangal manssil
oru then vandaay parannum
pranaya laya sindooram mukarnnum
muralikayil aanandam thiranjum
rasabharitha sukhakandha
sammoha vasanthamaakantha
anantha maarolsavam (sreela)

Movie Name: Nandanam (2002)
Singer: Yesudas KJ
Music Director: Raveendran
Lyrics: Girish Puthenchery
Year: 2002

39.பத்மஸ்ரீ. கே.ஜே.யேசுதாஸ் அவர்களைப் பற்றிய பாடல்

யேசுதாஸின் ரசிகர்கள் பலர். அவருடைய குரலுக்கு
நெக்குருகிப் போகின்றோம். அவரது ரசிகர்
ஒருவர் மலையாளத்தில் யேசுதாஸைப் புகழ்ந்து
பாடியிருக்கிறார்.

இசைக்கு மொழி கிடையாது. மதம் கிடையாது.
அதற்கு யேசுதாஸ் அவர்கள் நிதர்சன உண்மை.




38.K.J.Yesudas photo biography

யேசுதாஸ் அவர்கள் தன்னுடை புகைப்படக் கண்காட்சியை
பார்த்து ரசிக்கும் வீடியோ.


37.நீ தோனே ஆகேனா சங்கீதம்- பிலஹரி

ருத்ரவீணா (உன்னால் முடியும் தம்பியின் தெலுங்கு
பதிப்பு)

மானவ சேவை துரோகமா என்று தமிழில் வரும்
பாடலைப் போன்ற பாடல் இது.


36.idhele tara tara la charitham

1992 ஆம் ஆண்டு பெத்தரீகம் எனும்
தெலுங்கு படத்தில் இந்தப் பாடல்.

ராஜ் கோடியின் இசையில்
யேசுதாஸ், ஸ்வர்ணலதா.

இதேலே தர தரால சரிதம்.



Idele Tharatharala Charitam Lyrics

idele taratarala charitam jwalinche jeevitala kadanam(2)
pagamo pranamayena premale
dooramayena nirase ningi ki
egasena asale ralipoyena

(idele..)

odilo perigina chinnarini eraga chesina da dweshamu
kadamarada e pani agada
manishe pasuvuga marite kasiga sisuvunu konte(2)
abhamu subhamu erugani valapulu odipoyena

(idele)
virisi viriyani poototalo ragile
mantalu challarava arpedela odarchedela
neere nippuga marite veluge cheekati moogite(2)
pagalu segalu mamatala puvvulu kalipoyena

(idele...)

35.Aakasa Desana Aashada Maasana....

1982ஆம் ஆண்டு மேக சந்தேசம் என்னும்
தெலுங்கு படத்தின் இந்தப் பாடலுக்கு
யேசுதாஸிற்கு தேசிய விருது கிடைத்தது.





Aakaasa Desaana
aashaaDha maasaana
merisETi O mEghamaa merisETi O mEghamaa
virahamO daahamO viDalEni mOhamO
vinipinchu naa cheliki mEghasandESam mEghasandESam



vaanakaaru kOyilanai tEllavaari vEnnalanai
vaanakaaru kOyilanai tEllavaari vEnnalanai
ee yEDaari daarulalO eDada nEnu parichaanani
kaDimivOlE nilichaanani
uramani taramani oosulatO ulipiri chinukula baasalatO
vinnavinchu naa cheliki vinna vEdanaa naa viraha vEdanaa

aakaaSa deshaana||


raalupoola tEniyakai raatipoola tummEdanai
raalupoola tEniyakai raatipoola tummEdanai
ee nisheedi neeDalalO nivurulaaga migilaanani
Sidhila jeevinainaanani
tOlakari merupula lEKalatO rudhira bhaashpajala daaralatO
aa..aa..aa..aaa
vinnavinchu naa cheliki manOvEdanaa naa maranayaatanaa

aakaaSa deshaana||

34.பூபாள‌ம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்..!!




படம் : தூறல் நின்னு போச்சு
இசை : இளையராஜா
குரல் : கே.ஜே.யேசுதாஸ் & உமா ரமணன்

பூபாள‌ம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே

(பூபாள‌ம் இசைக்கும்...)

மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே
நாயகன் ஜாடை நூதனமே நாணமே பெண்ணின் சீதனமே
மேகமழை நீராட தோகை மயில் வாராதோ
தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது நனநனநனந‌ன‌னா

(பூபாள‌ம் இசைக்கும்...)

பூவை எந்தன் தேவை உந்தன் சேவை அல்லவா
மன்மதன் கோயில் தோரணமே மார்கழி திங்கள் பூமுகமே
நாளும் இனி சங்கீதம் ஆடும் இவள் பூந்தேகம்
அம்மம்மா அந்த சொர்கத்தில் சுகம் நனநனநனந‌ன‌னா

(பூபாள‌ம் இசைக்கும்...)

33.வா வா அன்பே அன்பே..!!

படம் : அக்னி நட்சத்திரம்.
இசை : இளையராஜா.
குரல் : கே.ஜே.யேசுதாஸ், சித்ரா



Get Your Own Hindi Songs Player at Music Plugin


வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்

(வா வா அன்பே அன்பே...)

நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும்
காலம் தோறும் என்னைச் சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரைக்கூறும் பொன்மணி

காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்

நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே
நீயின்றி ஏது பூவைத்த மானே
இதயம் முழுதும் எனது வசம்

(வா வா அன்பே அன்பே...)

கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல காதல் என்னும் காவியம்
அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம்
பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்

காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது

உன் தோளில் தானே பூமாலை நானே
சூடாமல் போனால் வாடாதோமானே
இதயம் முழுதும் எனது வசம்

(வா வா அன்பே அன்பே...)

31.பூங்காவியம் பேசும் ஓவியம்..!





படம் : கற்பூர முல்லை
இசை : இளையராஜா
குரல் : கே.ஜே.ஜேசுதாஸ் & பி.சுசீலா



பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆனிப் பொன் தேரோ ஆரிரோ ஆரோ
வெள்ளிப்பன்னீரோ ஆரிரோ ஆரோ
பூங்காவியம் பேசும் ஓவியம்

பாட்டுதான் தாலாட்டுதான்
கேட்கக் கூடும் என நாளும்
வாடினாள் போராடினாள்
வண்ணத்தோகை நெடுங்காலம்
தாய் முகம் தரிசனம் தரும் நாள் இது
சேய் மனம் உறவெனும் கடல் நீந்துது
பாசம் மீறும்போது பேசும் வார்த்தை ஏது
மயக்கத்தில் மனம் சேர்ந்தது

(பூங்காவியம்...)

யார் மகள் இப்பூமகள்
ஏது இனி இந்தக் கேள்வி
கூட்டிலே தாய் வீட்டிலே
வாழும் இனி இந்தக் குருவி
பாடலாம் தினம் தினம் புது கீர்த்தனம்
நாளெல்லாம் தளிர் விடும் இந்தப் பூவனம்
வானம் பூமி வாழ்த்தும்
வாடைக் காற்றும் போற்றும்
புதுக்கதை அரங்கேறிடும்

(பூங்காவியம்...)

30.உன்னிடம் மயங்குகிறேன்..!

Unnidam Mayangugir...




படம் : தேன் சிந்துதே வானம்
இசை : குமார்
பாடல் வரிகள் : வாலி
பாடியவர் : கே.ஜே.யேசுதாஸ்


உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர்க் காதலியே
இன்னிசை தேவதையே

(உன்னிடம்...)

வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்
வண்ண விழிப் பார்வையெல்லாம் தெய்வீகம்
பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்
இன்பங்கள் உருவாகக் காண்போம்
குரலோசை குயிலோசையென்று
மொழிபேசு அழகே நீ இன்று

(உன்னிடம்...)

தேன்சிந்தும் வானமுண்டு மேகத்தினால்
நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்
கார்காலக் குளிரும் மார்கழிப் பனியும்
கண்ணே உன் கைசேரத் தணியும்
இரவென்ன பகலென்ன தழுவு
இதழோரம் புதுராகம் எழுது

(உன்னிடம்...)

29.surmai akhiyon mein - sadma

மூன்றாம் பிறை திரைப்படம் ஹிந்தியில் சத்மா
என்ற பெயரில் எடுக்கப்பட்டது. அதில் கண்ணே
கலைமானே பாடலின் ஹிந்தி வடிவம்
யேசுதாஸ் பாடியது.

இதோ பாடல்:





Surmayee ankhiyon main nanha munna ek sapana de jaa re
Surmayee ankhiyon main nanha munna ek sapana de jaa re

nindiya ke udate paakhi re, ankhiyon maon aaja saathi re
raa rii raa ram o raaree ram

Surmayee ankhiyon main nanha munna ek sapana de jaa re



sachcha koi sapanaa dejaa
mujhako koi apana dejaa
anajaana sa magar kuchh pahachaana sa
halka phulka shabanami
resham se bhi reshami
suramai ...



raat ke rath par jaane vaale
neend ka ras barasaane vaale
itana kar de ko meri ankhain bhar de
ankhon main basata rahe, sapana ye hansata rahe
sapana yoonN chalata rahe
ankhiyon main basata rahe
suramai


கண்ணே கலைமானே பாடலுக்கு இங்கே:

28.பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க.....

Get this widget | Track details | eSnips Social DNA



நாயகி நான்முகி நாராயணிகை நளின பஞ்ச நாயகி

சாம்பவி சங்கரி சாமனை சாதி நச்சு நாயகி

மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று

ஆயாகியாதி உடையாள் சரணம் சரணம் சரணம்

சரணம் சரணம் சரணம்


பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த

காட்சி இங்கு காணக் கிடைக்க

ஊனுருக உயிருருக தேன் தரும் தடாகமே

மதி மருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே

(பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த

காட்சி இங்கு காணக் கிடைக்க)




இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி

இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி

இளகி முத்து வடங்கொண்ட கொங்கை மலை

கொண்டிறைவர் வலிய நெஞ்சை நலம்

கொண்ட நலம் கொண்ட நாயகி நல்லிரவின்

படங் கொண்ட அல்குல் பனிமொழி

வேதப் பரிபுரையே! வேதப் பரிபுரையே!

பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த

காட்சி இங்கு காணக் கிடைக்க.


படம்: குணா
பாடியவர்: கே.ஜே. யேசுதாஸ் & குழு

27.கல்யாண தேன் நிலா..!

படம் : மௌனம் சம்மதம்
இசை : இளையராஜா
பாடியவர்கள் : கே.ஜே.யேசுதாஸ் & சித்ரா







கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

தென்பாண்டிக் கூடலா
தேவாரப் பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா

என் அன்புக் காதலா
என்னாளும் கூடலா
பேரின்பம் மெய்யிலா
நீ தீண்டும் கையிலா

பார்ப்போமே ஆவலாய்
வா வா நிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதிக் கூண்டிலா

சங்கீதம் பாட்டிலா
நீ பேசும் பேச்சிலா

என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா
தேனூறும் வேர் பலா
உன் சொல்லிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

26.சின்னி சின்னி கன்னைய்யா...

இளையராஜாவின் முதல் தெலுங்கு பாடல்
இதுதான்.

பத்ரகாளி தெலுங்கு பதிவில்
கண்ணன் ஒரு கைக்குழந்தை பாடல் இது.

தெலுங்கில் முரளிமோகன், ஜெயப்ரதா
நடித்திருக்கிறார்கள்.

பாடியவர்கள் யேசுதாஸ் & சுசிலா




விரும்பிக் கேட்டது கே.ஆர். எஸ்

25.எங்கெங்கு நீ சென்ற போதும்..!!




படம் : நினைக்க தெரிந்த மனமே
இசை : இளையராஜா
பாடியவர்கள் கே.ஜே.யேசுதாஸ் & சித்ரா



எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்
ஆனந்த கீதம் ஆரம்பமாகும்
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே

எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்

கண்களின் பார்வை அம்புகள் போலே
நெஞ்சினிலே பாய்வதும் ஏன்?
அம்புகள் மீண்டும் பாய்ந்திடும் போது
காயங்களும் ஆறியதேன்?
ஆறிடும் நெஞ்சம் தேறிடும் நேரம்
பிரிந்தது ஏனோ உன் உறவு
நெருங்கிடும் போதும் நீங்கிடும் போதும்
மயங்குவதேனோ என் மனது
இரு நெஞ்சின் துன்பம் இது காதல் தான்
அதுபோல இன்பம் எது கண்மணி
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே

(எங்கெங்கு நீ சென்ற போதும்...)

மாலை நன்நேரம் மாறிட வேண்டாம்
மாங்குயிலே மாங்குயிலே
காலங்கள் கூட மாறிட வேண்டாம்
கண்மணியே கண்மணியே
சூரியன் மேற்கினில் சென்றிடட்டும்
சந்திரன் அங்கே நின்றிடட்டும்
மேகங்கள் வானத்தில் நிலை பெறட்டும்
கடலினில் கூட அலை நிற்கட்டும்
உன்னோடு சேரும் ஒரு நேரமே
என்றென்றும் இங்கே நிலையாகட்டும்
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே

(எங்கெங்கு நீ சென்ற போதும்...)


பி.கு : இது 25-வது பதிவு. கானகந்தர்வனின் அனைத்து பாடல்களையும் இங்கு பதிவிட வேண்டும் என்றொரு கனவு இருக்கிறது. முடியும் என்ற நம்பிக்கைகளுடன்...!

24.சந்தோஷம் காணாத வாழ்வுண்டா! சங்கீதம் பாடாத ஆளுண்டா!



ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று எண்ணி
வாழ்ந்துவிட்டால்... ஆஹா. மனதிற்கு
இதம் தரும் வார்த்தைகள்.

சொந்தம்16 திரைப்படத்திலிருந்து இந்தப் பாடல்.


Get this widget | Track details | eSnips Social DNA


சந்தோஷம் காணாத வாழ்வுண்டா!
சங்கீதம் பாடாத ஆளுண்டா!

ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று
எண்ணி வாழ்ந்து விட்டால்


தென்னையின் கீற்று விழவில்லை என்றால்
தென்னைக்கு என்றும் வளர்ச்சி இல்லை
தங்கத்தை தீயில் சுடவில்லை என்றால்
மங்கையர் சூட நகையுமில்லை.

பிறப்பதில் கூட துயரிருக்கும்
பெண்மைக்கு பாவம் சுமை இருக்கும்
வலி வந்துதானே வழி பிறக்கும்.

சந்தோஷம் காணாத வாழ்வுண்டா...ஆ


ஊருக்குச்சிந்தும் வான்மழை தன்னில்
உனக்கென்று கொஞ்சம் துளிகள் உண்டு
நம்பிக்கை மீது நம்பிக்கை கொண்டால்
நாளைகள் இன்றே வருவதுண்டு!

பகல் வந்தபோது வெளிச்சமுண்டு
இருள் வந்த போது விளக்கு உண்டு
எறும்புக்கும் கூட சுகங்கள் உண்டு!
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா

பாசங்கள் போதும் பார்வைகள் போதும்
பாலையில் நீரும் சுரந்து வரும்
புன்னகை போதும் பூ மொழி போதும்
போர்களும் கூட முடிந்துவிடும்!

பாதையை அன்பே திறந்து விடும்
பாறையும் பழமாய் கனிந்துவிடும்
வாழ்க்கையின் ஆழம் விளங்கிடும்.


சந்தோஷம் காணாத வாழ்வுண்டா!
சங்கீதம் பாடாத ஆளுண்டா!

ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று
எண்ணி வாழ்ந்து விட்டால்.

சந்தோஷம் காணாத வாழ்வுண்டா!
சங்கீதம் பாடாத ஆளுண்டா!

23.ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே..!!



படம் : இளமைக்காலங்கள்.
இசை : இளையராஜா.
குரல் : கே.ஜே.ஜேசுதாஸ்.

ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும்
ஏங்காதே...என் அன்பே ஏங்காதே

(ஈரமான ரோஜாவே...)

என்னைப் பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்திவிட்டுப் போகும்
என்னைப் பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்திவிட்டுப் போகும்
உன் வாசலில் என்னைக் கோலம் இடு
இல்லை என்றால் ஒரு சாபம் இடு பொன்னாரமே
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
என்னோடு நீ பாடிவா சிந்து

(ஈரமான ரோஜாவே...)

நேரம் கூடிவந்த வேளை
நீ நெஞ்சை மூடிவைத்த கோழை
நேரம் கூடிவந்த வேளை
நீ நெஞ்சை மூடிவைத்த கோழை
என் நெஞ்சிலே இனி ரத்த‌ம் இல்லை
கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை என் காதலி
உன் போல என்னாசை தூங்காது ராணி
தண்ணீரில் தள்ளாடுதே தோணி

ஈரமான ரோஜாவே ஏக்கமென்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும்
ஏங்காதே...என் அன்பே ஏங்காதே
ஏங்காதே...என் அன்பே ஏங்காதே

22.ராஜ ராஜ சோழன் நான்..!!





படம் : இரட்டை வால் குருவி.
இசை : இளையராஜா.
குரல் : கே.ஜே.ஜேசுதாஸ்



ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்கம் வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே

(ராஜ ராஜ சோழன் நான்...)

கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
கை நீட்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்
செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி

(ராஜ ராஜ சோழன் நான்...)

கள்ளூற பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண்பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
முந்தாணை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஓரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தல்லாடுமே பொன் மேனி கேளாய் ராணி

(ராஜ ராஜ சோழன் நான்...)

21.கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை

பத்ரகாளி படத்தின் இப்பாடலை மறக்க முடியுமா?





கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கண்ணம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என் மனதை

கையிரண்டில் நானெடுத்து
பாடுகின்றேன் ஆராரோ!
மைவிழியே தாலேலோ!
மாதவனே தாலேலோ!

(கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கண்ணம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என் மனதை)


உன் மடியில் நானுறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ?


உன் மடியில் நானுறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ?

ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தம் இந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள் வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா.

அன்னமிடும் கைகளிலே
ஆடிவரும் பிள்ளையிது
உன்னருகில் நானிருந்தால்
ஆனந்தத்தின் எல்லையது.

காயத்ரி மந்திரத்தை
உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும் வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா.

மஞ்சள் கொண்டு நீராடி
மை குழலில் பூச்சூடி
வஞ்சி மகள் வரும்போது
ஆசை வரும் ஒரு கோடி

மஞ்சள் கொண்டு நீராடி
மை குழலில் பூச்சூடி
வஞ்சி மகள் வரும்போது
ஆசை வரும் ஒரு கோடி

கட்டழகன் கண்களுக்கு
மை எடுத்து எழுதட்டுமா?
கண்கள் படக்கூடமென்று
பொட்டு ஒன்று வைக்கட்டுமா?


(கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கண்ணம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என் மனதை)

கையிரண்டில் நானெடுத்து
பாடுகின்றேன் ஆராரோ!
மைவிழியே தாலேலோ!
மாதவனே தாலேலோ!



ஆராரிரோ ஆராரிரொ
ஆராரிரோ ஆராரிரோ

படம்: பத்ரகாளி (1976)
பாடலாசிரியர்; வாலி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: யேசுதாஸ், சுசிலா

20.கோயி காதா மேன் சோ ஜாதா...

கோயி காதா மேன் சோ ஜாதா... ஆஹா. யாராவது பாடினால்
நான் தூங்குவேன் என்று பொருள்.

பாடுவது யேசுதாஸின் குரலாக இருந்தால்,
தலைவருடும் கைகள் கூடத்தேவையிராது.
தனது குரலிலேயே இனிமையை வைத்திருக்கிறாரே!
இதோ மனதை அமைதி படுத்தும் அந்தப் பாடல்:




Koi Gaata Main So ...


கோயி காதா மேன் சோ ஜாதா
கோயி காதா மேன் சோ ஜாதா
கோயி காதா ......


சன்ஸ்க்ருதி கே விசிதிரித் சாகர் பர்
சப்னோகி நொளகா கே அந்தர்
சுக் துக் கி லஹரோன் பர் உட் கிர்
பஹதா ஜாதா மெயின் சோ ஜாதா.

(கோயி காதா மேன் சோ ஜாதா)


ஆன்கோ மேன் பர்கர் பியார் அமர்
ஆஷிஷ் ஹதேலி மே பர் கர்
கோயி மேரா சிர் கோதி மே ரக்
சஹலாதா மேன் சோ ஜாதா.

(கோயி காதா மேன் சோ ஜாதா)


மேரே ஜீவன் கா காராஜல்
மேரே ஜீவன் கா ஹாலாஹல்- மேரே
மேரே ஜீவன் கா காராஜல்
மேரே ஜீவன் கா ஹாலாஹல்

கோயி அப்னே ஸ்வர் மேன் மதுமை கர்
பர்ஸாதா மேன் சோ ஜாதா.

(கோயி காதா மேன் சோ ஜாதா)

(கோயி காதா மேன் சோ ஜாதா)

மை சோ ஜாதா
மை சோ ஜாதா
கோயி காதா மேன் சோ ஜாதா)
மை சோ ஜாதா


koi gaata main so jaata - 2

sansriti ke vistrit saagar par
sapanon ki nauka ke andar
sukh dukh ki laharon par ut gir
bahata jaata, main so jaata

aankho mein barkar pyaar amar
aashish hatheli mein bhar kar
koi mera sar godhi mein rakh
sahalaata, main so jaata



mere jivan ka kaaraajal
mere jivan ka haalaahal
koi apane svar mein madumay kar
barsatha main so jaata


koi gaata main so jaata


படம்: ஆலாப் (1977)
வரிகள்: ஹரிவன்சராய் பச்சன்.
இசை: ஜெயதேவ்.
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

19.பூவே செம்பூவே..!





Get Your Own Hindi Songs Player at Music Plugin

படம் : சொல்லத்துடிக்குது மனசு
இசை : இளையராஜா
பாடல் வரிகள் : கவிஞர் வாலி



பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே...)

நிழல்போல நானும் நடைபோட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்காலபந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக்கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
என்னாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே...)

உனைப்போல நானும் ஒரு பிள்ளைதானே
பலர்வந்து கொஞ்சும் கிளிப்பிள்ளை நானே
உனைப்போல நானும் மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நாந்தான் பார்த்தாலே போதும்
இந்நாளும் எந்நாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதனொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே...)

18.குழலும் யாழும் குரலினில் தொனிக்க கும்பிடும் வேளையிலே...



திருச்சி வானொலியில் காலை 6 மணி பக்திமாலை
நிகழ்ச்சியில் இந்தப் பாடலை கேட்டிருப்பீர்கள்.

ஆரோக்கியமாதாவைப்பற்றிய அந்தப்பாடல் இதோ.


Get this widget | Track details | eSnips Social DNA



குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே...

குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே
மழலை யேசுவை மடியில் சுமந்து
மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா
வருவாளே!

குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே
மழலை யேசுவை மடியில் சுமந்து
மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா
வருவாளே!

******************
அருளே நிறைந்த மரியே என்று
அன்புடன் அழைக்கயிலே....
அருளே நிறைந்த மரியே என்று
அன்புடன் அழைக்கயிலே.

இருளே நீங்க இறைவனை ஏந்தி
இன்னருள் தருவாளே- மாதா
இன்னருள் தருவாளே.

குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே
மழலை யேசுவை மடியில் சுமந்து
மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா
வருவாளே!
*****************

ஜபமே செய்து தவமே புரிந்து
ஜெபிக்கும் வேளையிலே...
ஜபமே செய்து தவமே புரிந்து
ஜெபிக்கும் வேளையிலே

ஜயமே தருவாள் பயமே வேண்டாம்
ஜகத்தின் இராக்கினியே- இந்த
ஜகத்தின் இராக்கினியே.

குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே
மழலை யேசுவை மடியில் சுமந்து
மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா
வருவாளே!

****************

வேளாங்கன்னி மாதா அருளை
வியந்து போற்றுவோமே!
நாளும் பொழுதும் நாயகி அவளை
நயந்து வாழ்த்துவோமே-என்றும்
நயந்து வாழ்த்துவோமே

குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே
மழலை யேசுவை மடியில் சுமந்து
மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா
வருவாளே!

17.அம்மா என்றழைக்காத உயிரில்லையே...!



படம் : மன்னன்
இசை : இளையராஜா
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ்



அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில்நின்று பேசும்தெய்வம்
பெற்றதாயன்றி வேறொன்று ஏது

(அம்மா என்றழைக்காத.....)

அபிராமி சிவகாமி கருமாரி மகமாயி
திருக்கோவில் தெய்வங்கள் நீதானமா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள்வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே

(அம்மா என்றழைக்காத.....)

பசும்தங்கம் புதுவெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே

(அம்மா என்றழைக்காத.....)

16.கண்ணே கலைமானே....




படம்:மூன்றாம் பிறை
இசை:இளையராஜா
பாடல்:கண்ணதாசன்
பாடியவர்:கே.ஜே.ஜேசுதாஸ்



கண்ணே கலைமானே....
கன்னி மயிலென கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ...ஓராரிராரோ... ராரிராரோ...ஓராரிராரோ...



கண்ணே கலைமானே....
கன்னி மயிலென கண்டேன் உனை நானே


ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது


கண்ணே கலைமானே....
கன்னி மயிலென கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ...ஓராரிராரோ... ராரிராரோ...ஓராரிராரோ...



காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி நீதானே என் சந்நிதி...


கண்ணே கலைமானே....
கன்னி மயிலென கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ...ஓராரிராரோ... ராரிராரோ...ஓராரிராரோ...

15.துளசி தள முலச்சே சந்தோஷமுகா

இந்தப் பாடல் தியாகராஜரின் கீர்த்தனை. உன்னால் முடியும்
தம்பியின் தெலுங்கு பதிப்பான ”ருத்ரவீணா”வில்
டைட்டில் பாடலாக இந்தப்பாடல் வரும்.

யேசுதாஸின் கர்நாடக இசைப் பயிற்சி இந்தப்பாட்டில்
விளங்கும்.


Get this widget | Track details | eSnips Social DNA





துளசி தள முலச்சே சந்தோஷமுகா-பூஜிம்து
துளசி தள முலச்சே சந்தோஷமுகா-பூஜிம்து
துளசி தள முலச்சே சந்தோஷமுகா-பூஜிம்து
துளசி தள முலச்சே சந்தோஷமுகா-பூஜிம்து.
துளசி............ சந்தோஷமுகா.


பலுமாரு சிரகாலமு....ஆஆஆஆஆ
பலுமாரு சிரகாலமு பரமாத்முனி பாதமுலனு.
பலுமாரு சிரகாலமு பரமாத்முனி பாதமுலனு.

துளசி தள முலச்சே சந்தோஷமுகா-பூஜிம்து


சரஸிருக புந்நாக சம்பக பாடல குரவக
சரஸிருக புந்நாக சம்பக பாடல குரவக

கரவீர மல்லிக சுகந்த ராஜ சுமமுலு
கரவீர மல்லிக சுகந்த ராஜ சுமமுலு

தரணிவி ஒக பர்யாயமு தர்மாத்முனி
தரணிவி ஒக பர்யாயமு தர்மாத்முனி

சாகேதபுர வாசுனி - ஸ்ரீராமுனி..
சாகேதபுர வாசுனி - ஸ்ரீராமுனி..
வர தியாகராஜ நுதுனி

(துளசி....... பூஜிம்து)

படம்: ருத்ரவீணா
மொழி: தெலுங்கு
பாடியவர்: யேசுதாஸ்


pallavi

tuLasI daLamulacE santOSamugA pUjintu

anupallavi

palumAru cirakAlamu paramAtmunipAdamulanu

caraNam

sarasIruha punnAga campaka pATala kuruvaka karavIra mallikA sugandha rAja sumamula
dhara nivi oka paryAyamu dharmAtmuni sAkEtapura vAsuni shrI rAmuni vara tyAgarAja nutuni

.

--------------------------------------------------------------------------------

Meaning:
I shall ever be worshipping with joy the Transcendental Lord, the personification of righteousness, this Prince of Ayodhya (kingdom where Rama lived), with tender tulasi (a type of sacred basil) leaves. I shall garland Him with fragrant flowers like the lotus, punnaga, campaka, jasmine, and lily.

14.செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்...!



படம் - முள்ளும் மலரும்
இசை - இளையராஜா
வருடம் - 1978
பாடியவர் - கே.ஜே.ஜேசுதாஸ்


செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து வ்ளைந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

(செந்தாழம் பூவில்...)

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

(செந்தாழம் பூவில்...)

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்கசிந்தனை
இதழில் வழியும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி

(செந்தாழம் பூவில்...)


பி.கு: புதுகைத் தென்றல் அக்காவிற்கு மிக மிக பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. அவங்களுக்காக இந்த பதிவு. நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

13.சாந்த் ஜைஸே முக்கடே பிந்தியா சிதாரா

Chand Jaise Mukhde...




தமிழில்:


சப் திதியன் கா சந்த்ரமா
ஜோ தேகா சாஹோ ஆஜ்
தீரே தீரே கூங்கடா சர்காவோ சர்காவோ
ஓ ஓ ஓ ஓஒ


சாந்த் ஜைஸே முக்டே பே பிந்தியா சிதாரா
சாந்த் ஜைஸே முக்டே பே பிந்தியா சிதாரா

நஹீன் பூலேகா மேரீ ஜான்
யே சிதாரா வோ சிதாரா
மானா தேரி நஜரோன் மேகூன் எக் அவரா, ஹோ அவரா,
நஹீன் பூலேகா மேரி ஜான்
யெஹ் அவரா, வோ அவாரா.


சாகர் சாகர் மோதி மில்தே பர்பத் பர்பத் பாரஸு
தன் மன் ஐஸே பீகே ஜைஸே பர்ஸே மஹ்வே கா ரஸ்
அரே கஸ்தூரி கோ கோஜ்தா ஃபிர்தா ஹை
எக் பஞ்ஜாரா வோ பஞ்ஜாரா
நனீன் பூலேகா மேரி ஜான்
யெஹ் பஞ்ஜ்சாரா, வோ பஞ்ஜாரா.



கஜ்ராரே ச்ன்சலு நைனோன் மேன் சூரஜ் சாந்த கா டேரா
ரூப் கே இஸ் பாவன் மந்திர் மேன் ஹன்ஸா கரே பஸேரா
பியாசே கீதோன் கி கங்கா கா து ஹி ஹே கினாரா ஹோ கினாரா
நஹீன் பூலேகா மேரி ஜான்
யேஹ் கினாரா, வோ கினாரா.


சாந்த் ஜைஸே முக்டே பே பிந்தியா சிதாரா
சாந்த் ஜைஸே முக்டே பே பிந்தியா சிதாரா

நஹீன் பூலேகா மேரீ ஜான்
யே சிதாரா வோ சிதாரா
மானா தேரி நஜரோன் மேகூன் எக் அவரா, ஹோ அவரா,
நஹீன் பூலேகா மேரி ஜான்
யெஹ் அவரா, வோ அவாரா.







Sab Tithiyan Ka Chandrama
Jo Dekhna Chaho Aaj
Dheere Dheere Ghoongta Sarkao sarkaavoo
oo ooo ooo

Chand Jaise Mukhde Pe Bindiya Sitara
Nahin Bhoolega Meri Jaan
Yeh Sitara Woh Sitara
Maana Teri Nazron Mein Main Hoon Ek Aawara, Ho Aawara
Nahin Bhoolega Meri Jaan
Yeh Aawara, Woh Aawara


Saagar Saagar Moti Milte Parbat Parbat Paras
Tan Man Aise Bheege Jaise Barse Mahuve Ka Ras
Are Kasturi Ko Khojta Phirta Hai Ek Banjara Ho Banjara
Nahin Bhoolega Meri Jaan
Yeh Banjara, Woh Banjara


Kajrare Chanchal Nainon Mein Suraj Chand Ka Dera
Roop Ke Is Paawan Mandir Mein Hansa Kare Basera
Pyase Geeton Ki Ganga Ka Tu Hi Hai Kinara Ho Kinara
Nahin Bhoolega Meri Jaan
Yeh Kinara, Woh Kinara


படம்: சாவன் கோ ஆனே தோ

விரும்பிக் கேட்டது: சுரேகா

12.என் உயிர் நீதானே...!


Get Your Own Hindi Songs Player at Music Plugin

படம்: ப்ரியா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ் & ஜென்ஸி


ஹத்தியக்கு சுக்காவா
ஸ்லாலுவக்கு ஜிந்த்தாவா
ஹத்தியக்கு சுக்காவா
ஸ்லாலுவக்கு ஜிந்த்தாவா
சயாபாண்டாங் டெரிமு
சயா பர் ஹரி ஹரி டோக்கா
சயாபாண்டாங் டெரிமு
சயா பர் ஹரி ஹரி டோக்கா
பர்தஸ் ஓராங் ஹத்தி படா மு



என் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே
என் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே
நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே


(என் உயிர் நீதானே.....)

பூங்கொடி தள்ளாட
பூவிழி வந்தாட
காதலை கொண்டாட
ஆசையில் வந்தேனே


அவ சந்திக் மச்சாங்
புங்காராயா
ஜானாலுபா
சாமா சாயா


(பூங்கொடி தள்ளாட.....)

நீ தந்த சொந்தம் மாறாதே
நான் கண்ட இன்பம் தீராதே
உன்னருகில் உன் இதழில்
உன் மடியில் உன் மனதில்
ஆயிரம் காலங்கள் வாழ்ந்திட வந்தேன்


(என் உயிர் நீதானே.....)

பாவையின் பொன்மேனி
ஜாடையில் தானாட
பார்வையில் பூந்தென்றல்
பாடிட வந்தேனே


ஹத்தி ஹித்த டுவா டுவா
ஓராங் சகல டுவா டுவா


நீ கொஞ்சும் உள்ளம் தேனாக
நான் கொள்ளும் இன்பம் நூறாக
என்னருகில் புன்னகையில்
கண்ணுறங்கும் மன்னவனே
காவியம் போலொரு வாழ்வினை கண்டேன்


(என் உயிர் நீதானே.....)

11.காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து

Kaanji Pattuduthi....



காஞ்சிப்பட்டுடுத்தி கஸ்தூரிப்பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்


காஞ்சிப்பட்டுடுத்தி கஸ்தூரிப்பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்

காஞ்சிப்பட்டுடுத்தி கஸ்தூரிப்பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்
அந்த திருமகளும் உன் அழகை பெற வேண்டும்

தென் குமரி கடலினிலே சிவந்த மாலை பொழுதினிலே
பெண் குமரி நீயும் நானும் ஆடுவோம்
அங்கு பேசாத கதைகள் எல்லாம் பேசுவோம்


(தென் குமரி கடலினிலே...)

சந்தனம் பூசுவோம் செந்தமிழ் பேசுவோம்
சந்தனம் பூசுவோம் செந்தமிழ் பாடுவோம்
சந்தோஷ ஊஞ்சலிலே ஆடுவோம்
நாம் சந்தோஷ ஊஞ்சலிலே ஆடுவோம்


(காஞ்சிப்பட்டுடுத்தி...)

தேனருவிக்கரையினிலே திருக்குற்றால மலையினிலே
நீரருவி உடல் தழுவக் குளிக்கணும்
நான் நெருங்கி வந்து உன் அழகை ரசிக்கணும்
குங்குமம் போலவே உன் முகம் மாறணும்
குங்குமம் போலவே உன் முகம் மாறணும்
பொய்க்கோபம் கொண்டு நீ விலகிப்போகணும்
பொய்க்கோபம் கொண்டு நீ விலகிப்போகணும்


(காஞ்சிப்பட்டுடுத்தி...)

பூம்புகாரின் நாயகியாம் புனிதமுள்ள குணவதியாம்
கண்ணகி போல் நீ வாழ நினைக்கணும்
உன் கணவனுக்கு பெருமைகளை சேர்க்கணும்


(பூம்புகாரின் நாயகியாம்...)

மாமியார் வாழ்த்தனும் மற்றவர் போற்றனும்
மாமியார் வாழ்த்தனும் மற்றவர் போற்றனும்
இந்த மாநிலமே உன் புகழை பாடனும்
இந்த மாநிலமே உன் புகழை பாடனும்


(காஞ்சிப்பட்டுடுத்தி...)


படம்: வயசுப்பொண்ணு.

பாடியவர்கள்: யேசுதாஸ், சாவித்திரி

பாடலாசிரியர் : முத்துலிங்கம்.

இசை: மெல்லிசை மன்னர். எம்.எஸ்.விஸ்வநாதன்.