ஓடி விளையாடு பாப்பா.

மகாகவி பாரதியாரின் அருமையானப் பாடல்.
ஏழாவது மனிதன் திரைப்படத்தில் யேசுதாஸின்
இனிமையான குரலில் கேட்டு மகிழுங்கள்.
ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வைய்யாதே பாப்பா.


ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வைய்யாதே பாப்பா.


காலை எழுந்ததும் படிப்பு
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு
என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா


சின்னஞ்சிறு குருவி போலே
நீ திரிந்து பறந்து வா பாப்பா
வண்ண பறவைகளைக்கண்டு நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வைய்யாதே பாப்பா.படம்: ஏழாவது மனிதன் (1982)
இசை:எல். வைத்தியநாதன்
பாடல் வரிகள்: மகாகவி சுப்ரமணிய பாரதியார்.

1 இசை மழையில் நனைந்தவர்கள்:

the new cinema said...

நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள் இப்போது கேட்டேன் கேட்டு விட்டு பதிகிறேன்
குரல் வளத்தில் லயித்து போனேன்