ராஜ்ஜியம் தான் ஏதுமில்லை



//வரி போடாத அரசாங்கம் இல்ல .. பழி போடாத ஒரு பொண்ணும் இல்ல ..
கண்ணுக்குள்ள சுமந்தேன் .. ஒரு சொல்லுக்குத்தான் துடிச்சேன்//

இனிமையான சோகப்பாடல் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.


படம்: மக்கள் ஆணையிட்டால்
நடிகர்கள்:விஜயகந்த், ரேகா
இசை:எஸ்.ஆ.ராஜ்குமார்
இயக்குநர்: ராம நாராயணன்.

ரொம்ப நாள் கழித்து தாஸண்ணாவின் குடிகாரன் பாட்டு சில மெட்டுக்களுடன்
இது போன்ற பாடல்கள் மிகவும் அருமையாக பாடியிருப்பார். ரொம்ப ரசிச்ச பாடல்
நீங்களூம் கேட்டு மகிழுங்கள்.

படம்: மக்கள் ஆணையிட்டால்
பாடியவர்: டாக்டர்.கே.ஜே. யேசுதாஸ்.

ராஜ்ஜியம் தான் ஏதுமில்லை ராஜானாக இருந்தேன்
ராகம் இல்ல தாளம் இல்ல ரானும் பாட்டு படிச்சேன்
பாவப்பட்ட கண்மணியே பழியை தானே சுமந்தேன்

ராஜ்ஜியம் தான் ஏதுமில்லை ராஜானாக இருந்தேன் ஹ்ஹ

பஞ்சுப்பொதி பக்கத்தில தீயும் இருக்கு
அது பத்தவில்ல பாசம் எனும் ஈரம் இருக்கு
நெஞ்சுக்குள்ள இன்னும் கூட நேசம் இருக்கு
என்னை வஞ்சம்ன்னு தள்ள என்ன நியாயம் இருக்கு
வரி போடாத அரசாங்கம் இல்ல
பழி போடாத ஒரு பொண்ணும் இல்ல

வரி போடாத அரசாங்கம் இல்ல
பழி போடாத ஒரு பொண்ணும் இல்ல
கண்ணுக்குள்ள சுமந்தேன்
ஒரு சொல்லுக்குத்தான் துடிச்சேன்

ராஜ்ஜியம் தான் ஏதுமில்லை ராஜானாக இருந்தேன்
ராகம் இல்ல தாளம் இல்ல ரானும் பாட்டு படிச்சேன்

சொத்துக்காக பரமேசன் மண்ணை சுமந்தான்
ஏசு தத்துவத்தை காப்பாத்த சிலுவை சுமந்தான்
பத்து மாசம் என் தாயும் என்னை சுமந்தாள்
நான் பட்ட கடன் தீரவில்லை உன்னை சுமந்தேன்
என் தேகம் எனக்கு பாரமில்லை
உன் சந்தேகம் எனக்கு தாளவில்லை

என் தேகம் எனக்கு பாரமில்லை
உன் சந்தேகம் எனக்கு தாளவில்லை
துண்பத்துக்கும் சிரிச்சேன்
அடி அன்புக்குதான் அழுதேன்

ராஜ்ஜியம் தான் ஏதுமில்லை ராஜானாக இருந்தேன்
ராகம் இல்ல.... தாளம் இல்ல ரானும் பாட்டு படிச்சேன்
பாவப்பட்ட கண்மணியே பழியை தானே சுமந்தேன்.


ராஜ்ஜியம் தான் ஏதுமில்லை ராஜானாக இருந்தேன் பாடல் இங்கே