அன்பிலார் எல்லாம் தமக்குரியர்.....
Get this widget | Track details | eSnips Social DNAஅன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு.

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி
தன்மெய் வருத்தக் கூலி தரும்.

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்

அன்னை இதயமாக அன்பு வடிவமாக
வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம்.

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்.கடவுளிலே கருணை தன்னைக் காணலாம்
அந்தக் கருணையிலே கடவுளையும் காணலாம்

நல்லமனசாட்சியே தேவன் அரசாட்சியாம்
அங்கு ஒரு போதும் மறையாது அவன் காட்சியாம்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்..பாவமென்ற கல்லறைக்கு பலவழி
என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி
இந்த வழி ஒன்றுதான் எங்கள் வழி என்றுநாம்
நேர்மை தவறாமல் நடை போடுவோம்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்


இதயம் தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்...
இதயம் தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்

அந்த ஒளி காணலாம் சொன்ன வழி போகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்
படம்: பல்லாண்டு வாழ்க
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

இசை: கே.வி.மகாதேவன்

1 இசை மழையில் நனைந்தவர்கள்:

நிஜமா நல்லவன் said...

nalla paattu..!