மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

கானக் கந்தர்வனின் குரலில் இந்தப் பாடல்
அனைவருக்கும் பிடித்தமான ஒன்று
கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகள்.
எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின்
இசையமைப்பில் மனமத லீலை திரைப்படத்திலிருந்து
இதோ இந்தப் பாடல்
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்.

மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்.
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.இரவில் நிலவொன்று உண்டு
உறவினில் சுகமொன்று உண்டு
இரவில் நிலவொன்று உண்டு
உறவினில் சுகமொன்று உண்டு

மனைவியின் கனவொன்று உண்டு
எனக்கது புரிந்தது இன்று.

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்.


பொறுத்தம் உடலில் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
பொறுத்தம் உடலில் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்

கணவனின் துணையோடுதானே
காமனை வென்றாக வேண்டும்.

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.

கவிஞன் கண்டாலே கவிதை
காண்பவன் கண்டாலே காதல்
கவிஞன் கண்டாலே கவிதை
காண்பவன் கண்டாலே காதல்

அழகினை புரியாத பாவம்
அருகினில் இருந்தென்ன லாபம்.

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்.


மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.

5 இசை மழையில் நனைந்தவர்கள்:

ஜோசப் பால்ராஜ் said...

மிக அருமையான வரிகள். அர்தப்பூர்வமானதும் கூட.

ஜேசுதாஸின் குரலில் கேட்க்க மிக இனிமையானப் பாடல்.

பாடல் வரிகளை பதிவிட்ட‌ அக்காவுக்கு வாழ்த்துக்கள்.

ஜோசப் பால்ராஜ் said...

மீ த ஃப்ர்ஸ்டே

புதுகைத் தென்றல் said...

வாங்க ஜோசப் நீங்க தான் ஃபர்ஸ்டு.

//மிக அருமையான வரிகள். அர்தப்பூர்வமானதும் கூட.//

அருமையான வார்த்தைகளால் இந்தப் பாடலை பாராட்டி விட்டீர்கள்.

வருகைக்கு நன்றி

இறக்குவானை நிர்ஷன் said...

எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று.
பதிவுக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க நிர்ஷான்,

தங்களுக்கும் பிடித்த பாடலா? சந்தோஷம்.