மதியம் சனி, ஆகஸ்ட் 9, 2008

30.உன்னிடம் மயங்குகிறேன்..!

Unnidam Mayangugir...




படம் : தேன் சிந்துதே வானம்
இசை : குமார்
பாடல் வரிகள் : வாலி
பாடியவர் : கே.ஜே.யேசுதாஸ்


உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர்க் காதலியே
இன்னிசை தேவதையே

(உன்னிடம்...)

வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்
வண்ண விழிப் பார்வையெல்லாம் தெய்வீகம்
பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்
இன்பங்கள் உருவாகக் காண்போம்
குரலோசை குயிலோசையென்று
மொழிபேசு அழகே நீ இன்று

(உன்னிடம்...)

தேன்சிந்தும் வானமுண்டு மேகத்தினால்
நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்
கார்காலக் குளிரும் மார்கழிப் பனியும்
கண்ணே உன் கைசேரத் தணியும்
இரவென்ன பகலென்ன தழுவு
இதழோரம் புதுராகம் எழுது

(உன்னிடம்...)

3 இசை மழையில் நனைந்தவர்கள்:

pudugaithendral said...

தேன்சிந்தும் வானமுண்டு மேகத்தினால்
நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்..


அருமையான வரிகள்.

நன்றி நிஜமா நல்லவன்.

Unknown said...

ithu illayaraja pattu entru ninaithein

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

பிடிச்ச சாங். நன்றிகள் :)