பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா




பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா ல்ல ல்லா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்போலே

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா


என்னாளும் நம்மைவிட்டு போகாது வசந்தம்
தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்
தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும்
ஏதேதோ ஏழை மனம் நினைக்கும்
தென்னை இளம் சோலை பாளைவிடும் நாளை
தென்னை இளம் சோலை பாளைவிடும் நாளை
கையிரண்டில் காதோறம் அன்னை மனம் பாடும்
கண்கள் மூடும்...

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா ல்ல ல்லா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்போலே

ஆளான சிங்கம் இரண்டும் கைவீசி நடந்தால்
காலடியில் பூமி எல்லாம் அடங்கும்
சிங்காரத்தங்கம் ரெண்டும் தேர்போல வளர்ந்தால்
ஆகாயம் வந்து இங்கே வணங்கும்

எங்களால் தாயே உயிர் சுமந்தாயே!
எங்களால் தாயே உயிர் சுமந்தாயே!
கண்களிலேயே முத்துச்சுரம் காப்பாத்தி
கட்டிவைத்தாய் நீயே எங்கள் தாயே!

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்போலே

படம்: நீங்கள் கேட்டவை
பாடியவர்:கே.ஜே.யேசுதாஸ்

வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்குத் தெரியாது

வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்குத் தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு கிடையாது, அன்புக்கு கிடையாது.
அன்புக்கு கிடையாது.

வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்குத் தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு கிடையாது, அன்புக்கு கிடையாது.
அன்புக்கு கிடையாது.

காவலுக்கு யாருமில்லை
கண்ணீருக்கும் ஈரமில்லை
வீடில்லை கூடும் இல்லை வீதியில் பூமாலை
கங்கையின்னும் காயவில்லை
கருணை இன்னும் சாகவில்லை
நம்பிக்கை என்னும் கையை நீட்டுகிறான் காளை
கப்பல் எங்கே போனால் என்ன?
கட்டுமரம் போதும் நாளை..

வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்குத் தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு கிடையாது, அன்புக்கு கிடையாது.
அன்புக்கு கிடையாது, அன்புக்கு கிடையாது
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்குத் தெரியாது


மொட்டுவிட்ட பாசம் அன்று
காதலாக பூத்தது இன்று சொந்தங்கள்
மலரும் நேரம் யார்தான் அறிவாரோ!
அவள் கண்ணில் ஓரப்பார்வை
இவன் கண்ணில் ஈரப்பார்வை
கண்ணுக்குள் கண்கள் எழுதும் கவிதை
வளர்ப்பாரோ!

வென்மேகமும் பெண்மோகமும் போகும்
வழி காண்பார் யாரோ!


வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்குத் தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு கிடையாது, அன்புக்கு கிடையாது.
அன்புக்கு கிடையாது
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்குத் தெரியாது


படம்: திருமதி ஒரு வெகுமதி
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்



சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்...!



படம்: உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ் & சித்ரா


சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நீயெனக்கு வண்ணக் களஞ்சியமே
சின்னமலர்க் கொடியே நெஞ்சில் சிந்தும் பனித்துளியே

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

உன்னாலே உண்டாகும் ஞாபகங்கள் ஒன்றிரண்டு அல்லவே
ஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள் என்றும் இரண்டல்லவே
சிற்றன்னவாசலின் ஓவியமே சிந்தைக்குள் ஊறிய காவியமே
எங்கே நீ அங்கேதான் நானிருப்பேன்
எப்போதும் நீயாடத் தோள் கொடுப்பேன்
மோகத்தில் நான் படிக்கும் மாணிக்க வாசகமே
நான் சொல்லும் பாடலெல்லாம் நீ தந்த யாசகமே

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நான் உனக்கு வண்ணக் களஞ்சியமே
சிந்தும் பனித்துளியே என்னைச் சேரும் இளங்கிளியே
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

உன்னாலே நான் கொண்ட காயங்களை முன்னும் பின்னும் அறிவேன்
கண்ணாலே நீ செய்யும் மாயங்களை இன்றும் என்றும் அறிவேன்
மின்சாரம் போலெனைத் தாக்குகிறாய் மஞ்சத்தைப் போர்க்களம் ஆக்குகிறாய்
கண்ணே உன் கண்ணென்ன வேலினமோ
கை தொட்டால் மெய் தொட்டால் மீட்டிடுமோ
கோட்டைக்குள் நீ புகுந்து வேட்டைகள் ஆடுகிறாய்
நானிங்கு தோற்றுவிட்டேன் நீயென்னை ஆளுகிறாய்

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நீயெனக்கு வண்ணக் களஞ்சியமே
சிந்தும் பனித்துளியே என்னைச் சேரும் இளங்கிளியே
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி

ஊமை நெஞ்சின் சொந்தம்...!



படம்: மனிதனின் மறுபக்கம்
இசை: இளையராஜா
குரல்: K.J.ஜேசுதாஸ்

ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்


வார்த்தைகள் தேவையா மௌனமே கேள்வியா


ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்


நேற்று பார்த்த பார்வையோ கேள்வி கேட்டு பார்த்தது
ஐயம் தீர்ந்து போனதால் அன்பு நீரை வார்த்தது
நேற்று பார்த்த பார்வையோ கேள்வி கேட்டு பார்த்தது
ஐயம் தீர்ந்து போனதால் அன்பு நீரை வார்த்தது


பாறை மனதில் பாசம் வந்தது
பந்தம் வந்த பின்னே ஒரு பாசம் வந்ததென்ன
கண்டு கொண்ட பின்னே அடி கண்ணில் ஈரம் என்ன
விதி என்ன விடை என்ன
இது சொல்லிக் கொள்ளும் சொந்தம் அல்ல


ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்


கால தேவன் ஏட்டில் அன்று பக்கம் மாறி போனது
உண்மை வந்து சாட்சி சொல்ல இன்று நன்மை சேர்ந்தது
கால தேவன் ஏட்டில் அன்று பக்கம் மாறி போனது
உண்மை வந்து சாட்சி சொல்ல இன்று நன்மை சேர்ந்தது


ரெண்டு உள்ளமும் கண்டு கொண்டது
போதும் துன்பம் போதும்
இனி பூக்கள் தோன்றும் மாதம்
காலம் உண்மை கூறும்
மனக் காயம் இங்கு ஆறும்
இரு கண்ணில் மழை வெள்ளம்
அது மௌனத்தாலே நன்றி சொல்லும்


ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

வார்த்தைகள் தேவையா மௌனமே கேள்வியா

ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்