24.சந்தோஷம் காணாத வாழ்வுண்டா! சங்கீதம் பாடாத ஆளுண்டா!ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று எண்ணி
வாழ்ந்துவிட்டால்... ஆஹா. மனதிற்கு
இதம் தரும் வார்த்தைகள்.

சொந்தம்16 திரைப்படத்திலிருந்து இந்தப் பாடல்.


Get this widget | Track details | eSnips Social DNA


சந்தோஷம் காணாத வாழ்வுண்டா!
சங்கீதம் பாடாத ஆளுண்டா!

ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று
எண்ணி வாழ்ந்து விட்டால்


தென்னையின் கீற்று விழவில்லை என்றால்
தென்னைக்கு என்றும் வளர்ச்சி இல்லை
தங்கத்தை தீயில் சுடவில்லை என்றால்
மங்கையர் சூட நகையுமில்லை.

பிறப்பதில் கூட துயரிருக்கும்
பெண்மைக்கு பாவம் சுமை இருக்கும்
வலி வந்துதானே வழி பிறக்கும்.

சந்தோஷம் காணாத வாழ்வுண்டா...ஆ


ஊருக்குச்சிந்தும் வான்மழை தன்னில்
உனக்கென்று கொஞ்சம் துளிகள் உண்டு
நம்பிக்கை மீது நம்பிக்கை கொண்டால்
நாளைகள் இன்றே வருவதுண்டு!

பகல் வந்தபோது வெளிச்சமுண்டு
இருள் வந்த போது விளக்கு உண்டு
எறும்புக்கும் கூட சுகங்கள் உண்டு!
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா

பாசங்கள் போதும் பார்வைகள் போதும்
பாலையில் நீரும் சுரந்து வரும்
புன்னகை போதும் பூ மொழி போதும்
போர்களும் கூட முடிந்துவிடும்!

பாதையை அன்பே திறந்து விடும்
பாறையும் பழமாய் கனிந்துவிடும்
வாழ்க்கையின் ஆழம் விளங்கிடும்.


சந்தோஷம் காணாத வாழ்வுண்டா!
சங்கீதம் பாடாத ஆளுண்டா!

ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று
எண்ணி வாழ்ந்து விட்டால்.

சந்தோஷம் காணாத வாழ்வுண்டா!
சங்கீதம் பாடாத ஆளுண்டா!

1 இசை மழையில் நனைந்தவர்கள்:

ns_shivam said...

சந்தோஷம் காணாத வாழ்வுண்டா!
சங்கீதம் பாடாத ஆளுண்டா! பாடல் இடம் பெற்ற படம் சொந்தம் 16 இல்லை, வசந்தி