18.குழலும் யாழும் குரலினில் தொனிக்க கும்பிடும் வேளையிலே...திருச்சி வானொலியில் காலை 6 மணி பக்திமாலை
நிகழ்ச்சியில் இந்தப் பாடலை கேட்டிருப்பீர்கள்.

ஆரோக்கியமாதாவைப்பற்றிய அந்தப்பாடல் இதோ.


Get this widget | Track details | eSnips Social DNAகுழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே...

குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே
மழலை யேசுவை மடியில் சுமந்து
மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா
வருவாளே!

குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே
மழலை யேசுவை மடியில் சுமந்து
மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா
வருவாளே!

******************
அருளே நிறைந்த மரியே என்று
அன்புடன் அழைக்கயிலே....
அருளே நிறைந்த மரியே என்று
அன்புடன் அழைக்கயிலே.

இருளே நீங்க இறைவனை ஏந்தி
இன்னருள் தருவாளே- மாதா
இன்னருள் தருவாளே.

குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே
மழலை யேசுவை மடியில் சுமந்து
மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா
வருவாளே!
*****************

ஜபமே செய்து தவமே புரிந்து
ஜெபிக்கும் வேளையிலே...
ஜபமே செய்து தவமே புரிந்து
ஜெபிக்கும் வேளையிலே

ஜயமே தருவாள் பயமே வேண்டாம்
ஜகத்தின் இராக்கினியே- இந்த
ஜகத்தின் இராக்கினியே.

குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே
மழலை யேசுவை மடியில் சுமந்து
மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா
வருவாளே!

****************

வேளாங்கன்னி மாதா அருளை
வியந்து போற்றுவோமே!
நாளும் பொழுதும் நாயகி அவளை
நயந்து வாழ்த்துவோமே-என்றும்
நயந்து வாழ்த்துவோமே

குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே
மழலை யேசுவை மடியில் சுமந்து
மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா
வருவாளே!

10 இசை மழையில் நனைந்தவர்கள்:

கானா பிரபா said...

அருமையான பாட்டு

இப்படி வித்தியாசமான பாட்டுக்களை கொடுங்க

ஆயில்யன் said...

அட ஆமாம் அக்கா! வானொலியில் கேட்ட பாடல்தான் சூப்பர்!

புதுகைத் தென்றல் said...

வாங்க பிரபா,

சொல்லிட்டீங்கள்ல. போட்டுத் தாக்கிடுவோம்.

புதுகைத் தென்றல் said...

ஆமாம் ஆயில்யன்,

பக்திமாலையில் இன்று இந்தப் பாட்டு வருமா என்று காத்திருப்பேன்.

தலைவர் பாட்டு கேட்டு நாள் துவங்கினால் ஒரு நல்லது நடக்கும் என்பது என் நம்பிக்கை.

(குறைந்தது அடி விழ வேண்டிய இடத்தில் வெறும் திட்டோடு போகும் :) )

cheena (சீனா) said...

அடடா - அடிக்குப் பதில் திட்டா = ஆகா தினமும் கேட்டுடலாமே

முத்துலெட்சுமி-கயல்விழி said...

எனக்கும் ரொம்ப பிடிச்சப்பாட்டு.. :)

புதுகைத் தென்றல் said...

வாங்க சீனா சார்,

எனக்கு யேசுதாஸ் பாடல்கள் ராசி.

பரிட்சை எழுதுவதற்கு முன்னால் யேசுதாஸ் பாடல் கேட்கணும், இப்படி நிறைய சென்டிமெண்டல் அட்டாச்மெண்ட் அவரது குரலுக்கு.

வருகைக்கு நன்றி.

புதுகைத் தென்றல் said...

வாங்க கயல்விழி,

உங்களுக்கும் பிடிச்சதா? ஓ ரொம்ப சந்தோஷம்.

வருகைக்கு நன்றிங்கோ

நாமக்கல் சிபி said...

இந்தப் பாட்டு குழந்தை ஏசு படத்துல வரும்னு நினைக்கிறேன்!

ராஜேஸ் பாடுற மாதிரி வரும்!

S.Arockia Romulus said...

i love k.j.yesudas
pls visit me here http://www.maravairemi.blogspot.com/