23.ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே..!!படம் : இளமைக்காலங்கள்.
இசை : இளையராஜா.
குரல் : கே.ஜே.ஜேசுதாஸ்.

ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும்
ஏங்காதே...என் அன்பே ஏங்காதே

(ஈரமான ரோஜாவே...)

என்னைப் பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்திவிட்டுப் போகும்
என்னைப் பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்திவிட்டுப் போகும்
உன் வாசலில் என்னைக் கோலம் இடு
இல்லை என்றால் ஒரு சாபம் இடு பொன்னாரமே
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
என்னோடு நீ பாடிவா சிந்து

(ஈரமான ரோஜாவே...)

நேரம் கூடிவந்த வேளை
நீ நெஞ்சை மூடிவைத்த கோழை
நேரம் கூடிவந்த வேளை
நீ நெஞ்சை மூடிவைத்த கோழை
என் நெஞ்சிலே இனி ரத்த‌ம் இல்லை
கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை என் காதலி
உன் போல என்னாசை தூங்காது ராணி
தண்ணீரில் தள்ளாடுதே தோணி

ஈரமான ரோஜாவே ஏக்கமென்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும்
ஏங்காதே...என் அன்பே ஏங்காதே
ஏங்காதே...என் அன்பே ஏங்காதே

8 இசை மழையில் நனைந்தவர்கள்:

புதுகைத் தென்றல் said...

இளமைக்காலங்கள் படத்தின் இந்தப் பாடலை கேட்கும் போது மனது என்னவோ செய்யும்.

நன்றி நிஜமா நல்லவன்

கோவை விஜய் said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

தமிழ் பிரியன் said...

ஆகா, அழகான பாடல்... நான் சிறு வயதாக இருக்கும் போது.. முதன் முதலில் பார்த்த ஞாபகம் இன்னும் உள்ள பாடல். அந்த ரோஜாப்பூ படம் போட்ட கவுன் வரும் பாட்டு என்று மட்டும் ஞாபகம் இருக்கும்... அப்புறம் தான் தெரிந்தது இந்த பாடல். ஜேசுதாஸின் அருமையான பாடல்களில் ஒன்று

ஆயில்யன் said...

நேரம் கூடி வந்த வேளை .............


ம் என்னாத்த சொல்றது காலங்கார்த்தால இந்த பாட்டை கேட்டுட்டு அப்புறம் இன்னிக்கு பூராவுமே ஒரே ஃபீலிங்க்ஸ் ஆகி திரியணும் முடிவு பண்ணிட்டீங்க :(

புதுகைத் தென்றல் said...

ஆமாம் தமிழ் ப்ரியன்

மிக அருமையானப் பாடல்களில் இதுவும் ஒன்று.

புதுகைத் தென்றல் said...

நேரம் கூடி வந்த வேளை .............

ஆஹா அடுத்த ஆளு ரெடி போல

ஆயில்யன் நடத்துங்க நடத்துங்க.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

எனது இளமைப் பிராயத்து காலக்கட்டத்தில் கிறுக்குப் பிடிக்க வைத்த பாடல் இது..

ம்.. அதெல்லாம் ஒரு காலம்..

இப்பல்லாம் ஏதாவது ஒரு பாட்டாவது மனசுல நிக்குதா..?

புதுகைச் சாரல் said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

தகுந்த மாசுக்கட்டுப்பாடு நடைமுறைகளும்,தனிமனித ஒத்துழைப்புமே எதிர்வரும் பயங்கரமான ஆபத்திலிருந்து நம்மை நாமே காத்துக் கொள்ள வழி வகுக்கும்.