41.நினைவாலே சிலை செய்து..!
படம் : அந்தமான் காதலி
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
குரல் : கே.ஜே.யேசுதாஸ் & வாணி ஜெயராம்


நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா...ஆ...ஆ..ஆ
திருக்கோவிலே ஓடி வா


நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா...ஆ...ஆ..ஆ
திருக்கோவிலே ஓடி வா

நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை
நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை
வேரின்றி மலரே ஏதம்மா
வேரின்றி மலரே ஏதம்மா

நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா!

ஐயா உன் நினைவேதான்
நான் பாடும் ராகங்கள்
அப்போதும் இப்போதும்
தப்பாத தாளங்கள்
ஐயா உன் நினைவேதான்
நான் பாடும் ராகங்கள்
அப்போதும் இப்போதும்
தப்பாத தாளங்கள்
கண்ணீரிலே நான் தீட்டினேன்
கன்னத்தில் கோலங்கள்
கன்னத்தில் கோலங்கள்

செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம்
செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம்
சம்சாரத் தேரில் நானேறி வந்தேன்
திருக்கோவிலே ஓடிவா!

ஆ...ஆ..ஆ..திருக்கோவிலே ஓடிவா!
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா!

முல்லைக்கு குழல் தந்த
பெண்மைக்குப் பெண்மை நீ
பிள்ளைக்குத் தோள் தந்த
அன்னைக்கு அன்னை நீ
முல்லைக்கு குழல் தந்த
பெண்மைக்குப் பெண்மை நீ
பிள்ளைக்குத் தோள் தந்த
அன்னைக்கு அன்னை நீ
அதிகாலையில் நான் கேட்பது
நீ பாடும் பூபாளம்

என் கண்கள் ரெண்டும்
பல்லாண்டு பாடி
என் கண்கள் ரெண்டும்
பல்லாண்டு பாடி
செவ்வானம் ஆனேன்
உன்னைத்தேடித் தேடி
திருக்கோவிலே ஓடிவா

ஆ...ஆ..ஆ..திருக்கோவிலே ஓடிவா!
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா!

ஆ...ஆ..ஆ..திருக்கோவிலே ஓடிவா!

2 இசை மழையில் நனைந்தவர்கள்:

புதுகைத் தென்றல் said...

இந்தப் படத்தில் அனைத்து பாடல்களுமே அருமையானது.

நினைவாலே சிலை செய்து

என்ன அருமையான வரிகள்.

நன்றி நிஜமா நல்லவன்.

(^oo^) bad girl (^oo^) said...

Very good......