வாழ்த்துக்கள் கானக்கந்தர்வனே!!

கானக்கந்தர்வன் பாடகனாக அவதாரம் எடுத்து இன்றோடு 50 வருடங்கள் முடிகின்றன.
யேசுதாஸ் அவர்கள் தாய் மொழி மலையாளம் தவிர தமிழ், தெலுங்கு,
கன்னட,பெங்காலி, உருது, ஹிந்தி, ஒரியா,குஜராத்தி, துலு, ரஷ்ய மற்றும் மராத்தி
மொழியில் இதுவரைக்கும் 50,000 பாடல்கள் பாடியிருக்கிறார்.

கடந்த 5 தசாப்தங்களாக தனது மயக்கும் குரலால் நம்மை மனதுக்கு
இதமளித்து வரும் இந்நந்நாளில் அவருக்கு கானக்கந்தர்வன் வலைப்பூவின்
சார்பில் வாழ்த்துக்கள். பத்மபூஷன் போன்ற பல விருதுகளையும்,
சிறந்த பாடகருக்காக பல மாநில விருதுகளையும் பெற்றிருக்கிறார்.





மானிட சேவை துரோகமா???

இன்று பத்மஸ்ரீ கமலஹாசன் பிறந்தநாள். உன்னால் முடியும் தம்பி
படத்தில் யேசுதாஸ் அவர்கள் பாடிய இந்த அருமையான பாடல்
கமலஹாசன் பிறந்தநாள் சிறப்பு பதிவாக வெளிவருகிறது.

ஒரு அருமையான கர்னாடக கச்சேரி போன்றே தனி ஆவர்தனம்
என கலக்கல் பாட்டு இது.



மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்

வீதியில் நின்று தவிக்கும் பராரியை
பார்ப்பதும் பாவமா.......
வீதியில் நின்று தவிக்கும் பராரியை
பார்ப்பதும் பாவமா.
வீதியில் நின்று தவிக்கும் பராரியை
பார்ப்பதும் பாவமா.
வீதியில் நின்று தவிக்கும் பராரியை
பார்ப்பதும் பாவமா.

மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா... ஆஆஆ

வீதி வீணைகளில் தந்தி சிந்தும்
இசை மனமுருகும்

நாத வீணையில் தினம் கேட்டு கேட்டு
நான் அழுதேன்.



படம்: உன்னால் முடியும் தம்பி
பாடியவர் : யேசுதாஸ்
இசை: இளையராஜா