ஓ நெஞ்சமே என் பாடலை



அழகான குரல்களில் அமைதியான பாடல்.

படம்: பாசக்கனல்
நடிகர்: நிழல்கள் ரவி
இசை:எஸ்.ஏ.ராஜ்குமார்
பாடலாசிரியர்:எஸ்.ஏ.ராஜ்குமார்
வருடம்:1989



ஓ நெஞ்சமே என் பாடலை நான் பாடுவேன்
கேள் கொஞ்சமே

ஓ நெஞ்சமே என் பாடலை நான் பாடுவேன்
கேள் கொஞ்சமே
இதயத்தை எங்கோ சிறையிலிட்டேனே
தனிமைக்கு என்னை விலைக்கொடுத்தேனே
என்னை மறந்தேனே

ஓ நெஞ்சமே என் பாடலை நான் பாடுவேன்
கேள் கொஞ்சமே

கைகோர்த்து நான் சென்ற காலங்கள்
மெய்யன்பின் மாறாத தின்னங்கள்
நீ கொண்ட வேறான என்னங்கள்
நிஜமென்றல் பெண்மைக்கு துக்கங்கள்

அறியாத பருவம் அல்ல எனது அன்பு கொண்டு
புரியாத பெண்மை உன்னை நான் என்ன சொல்வது

அன்பு கொண்டு பேசினால்
ஆசையென்று ஆகுமா
ஆண்களூக்கு ஆயிரம்
அர்த்தம் அது கூடுமா?

காலங்களின் கோலம் இது

ஓ நெஞ்சமே என் பாடலை நான் பாடுவேன்
கேள் கொஞ்சமே

கனவோடு என் காதல் தீயாச்சு
கதை போல என் வாழ்வும் வீணாச்சு
விதை போட மரம் வேறு உண்டாச்சு
உயிர் கூடு புயல் வந்து பாழாச்சு

விதையென்ற கேள்வி ஒன்றை
ஏன்  நீ கேட்க வேண்டுமா
விளையாட்டு தோழன் உன்னை
என் மனம் ஏற்க வேண்டுமா

காத்திருந்த ஆண் கிளி
நேற்று தூங்கிப் போனது
பார்த்திருந்த வென் புறா
கைப் பிடித்து சென்றது

போதும் விடு போராட்டமே

ஓ நெஞ்சமே என் பாடலை நான் பாடுவேன்
கேள் கொஞ்சமே
இதயத்தை எங்கோ சிறையிலிட்டேனே
தனிமைக்கு என்னை விலைக்கொடுத்தேனே
என்னை மறந்தேனே