உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே..?




படம்: என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ் & சித்ரா


உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள்
உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே


வெள்ளி நிலா வானவெளி போவது போல்
பிள்ளை நிலா துள்ளி இங்கு வந்ததம்மா .. ஹோ …ஹோ
அள்ளி அள்ளி கட்டிக்கொள்ள ஆனந்தமாய்
பிள்ளைகளின் செல்லமொழி கேட்டதம்மா


ஒருமர சிறு கூட்டில் கிளி ஒன்று இல்லை
பிரிந்திட பொறுக்காது தாய் அன்பின் எல்லை
பால்முகம் மறக்காமல் தடுமாறும்
சேய்முகம் கண்டால்தான் நிலை மாறும்


(ஓ ஓ ஓ ஓ...)


உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள்
உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே


தென்றல் ஒன்று தேகம் கொண்டு வந்தது போல்
சொந்தமொன்று மன்றமதில் வந்ததென்ன ..ஹோ ..ஹோ
சொர்க்கமொன்று பூமிதன்னில் கண்டதுபோல்
இன்பங்களை தந்துவிட்டு சென்றதென்ன


துணையாய் வழிவந்து எனைசேர்ந்த அன்பே
இனியும் உனைப்போல இணை ஏது அன்பே
எனக்கென நீதானே நம் வாழ்வில்
உனக்கென நான்தானே எந்நாளும்


(ஓ ஓ ஓ ஓ...)


உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள்
உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே

மரகத வள்ளிக்கு மணக்கோலம்...







Get Your Own Hindi Songs Player at Music Plugin


மரகத வள்ளிக்கு மணக்கோலம்...
என் மங்கலச் செல்விக்கு மலர்கோலம்
கண்மணி தாமரை கால்கொண்டு நடந்தால்
கண்களில் ஏனிந்த நீர்க்கோலம்.

கோலம்........ திருக்கோலம்....

(மரகத வள்ளிக்கு மணக்கோலம்...)


காலையில் கதம்பங்கள் அணிந்திருப்பால்
மாலையில் மல்லிகையில் முடிந்திருப்பாள்
திங்களில் சாமந்தி வைத்திருப்பாள்
வெள்ளியில் முல்லைகள் சுமந்திருப்பாள்

கட்டித்தங்கம் இனிமேல் அங்கே என்ன பூவை அணிவாளோ?
கட்டிக்கொண்ட கணவன் வந்து சொன்ன பூவை அணிவாளோ?

தினம் தோறும் திருநாளோ!!!


மரகத வள்ளிக்கு மணக்கோலம்...
என் மங்கலச் செல்விக்கு மலர்கோலம்
கண்மணி தாமரை கால்கொண்டு நடந்தால்
கண்களில் ஏனிந்த நீர்க்கோலம்.

கோலம்........ திருக்கோலம்....



ஆ ஆ ஆஅ ஆ.....ஆ...

மலரென்ற உறவு பறிக்கும் வரை
மகளென்ற உறவு கொடுக்கும் வரை
உறவொன்று வருவதில் மகிழ்ந்துவிட்டேன்
உறவொன்று பிரிவதில் அழுதுவிட்டேன்

எந்தன் வீட்டுக் கன்று இன்று எட்டி எட்டிப்போகிறது
கண்ணின் ஓரம் கண்ணீர் வந்து எட்டி எட்டிப்பார்க்கிறது

இமைகள் அதை மறைக்கிறது...

மரகத வள்ளிக்கு மணக்கோலம்...
என் மங்கலச் செல்விக்கு மலர்கோலம்
கண்மணி தாமரை கால்கொண்டு நடந்தால்
கண்களில் ஏனிந்த நீர்க்கோலம்.

கோலம்........ திருக்கோலம்....

**********************************
பாடியவர் : கே.ஜே.யேசுதாஸ்

படம்: அன்புள்ள அப்பா

இயக்கம். ஏ.சி. திரிலோக சந்தர்.

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

வருடம்:1987

கவிதையில் பூத்திருக்கும் கானகந்தர்வனின் குரல்


கவிதையில் பூத்திருக்கும் கானகந்தர்வனின் குரல்

இன்று சொர்க்கத்தின் திறப்புவிழா >> இதுதான் முதல் ராத்திரி >> இது இரவா பகலா >> விழியே கதை எழுது.

Get this widget | Track details | eSnips Social DNA


பிரபலமான பாடல்கள் தான் சந்தேகமே இல்லை தாஸண்ணாவின் தவிர்க்க முடியாத வெதுவெதுப்பா தகிக்கும் உணர்வுகளில் அடங்கிய குரலுடன் சேர்ந்து கொஞ்சும் குரல்யாளினி ராகினி பாஸ்கரன் அவர்களின் கவிதை குரலில் வித்தியாசமான ரசனையுடன் நிச்சயம் உங்கள் மனதை தாலாட்டும். கேட்டு மகிழுங்கள் மகிழ்ச்சியுடன் இருங்கள். ஒலித்தொகுப்பை நமக்காக வழங்கிய திருமதி.ராகினி பாஸ்கரன்,ஜெர்மனி அவர்களூக்கு கானகந்தரவன் நேயர்கள் சார்பில் நன்றி.

இங்கே பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள்