பத்ரகாளி படத்தின் இப்பாடலை மறக்க முடியுமா?
கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கண்ணம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என் மனதை
கையிரண்டில் நானெடுத்து
பாடுகின்றேன் ஆராரோ!
மைவிழியே தாலேலோ!
மாதவனே தாலேலோ!
(கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கண்ணம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என் மனதை)
உன் மடியில் நானுறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ?
உன் மடியில் நானுறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ?
ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தம் இந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள் வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா.
அன்னமிடும் கைகளிலே
ஆடிவரும் பிள்ளையிது
உன்னருகில் நானிருந்தால்
ஆனந்தத்தின் எல்லையது.
காயத்ரி மந்திரத்தை
உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும் வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா.
மஞ்சள் கொண்டு நீராடி
மை குழலில் பூச்சூடி
வஞ்சி மகள் வரும்போது
ஆசை வரும் ஒரு கோடி
மஞ்சள் கொண்டு நீராடி
மை குழலில் பூச்சூடி
வஞ்சி மகள் வரும்போது
ஆசை வரும் ஒரு கோடி
கட்டழகன் கண்களுக்கு
மை எடுத்து எழுதட்டுமா?
கண்கள் படக்கூடமென்று
பொட்டு ஒன்று வைக்கட்டுமா?
(கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கண்ணம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என் மனதை)
கையிரண்டில் நானெடுத்து
பாடுகின்றேன் ஆராரோ!
மைவிழியே தாலேலோ!
மாதவனே தாலேலோ!
ஆராரிரோ ஆராரிரொ
ஆராரிரோ ஆராரிரோ
படம்: பத்ரகாளி (1976)
பாடலாசிரியர்; வாலி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: யேசுதாஸ், சுசிலா
Blessed with a velvety voice
14 years ago
13 இசை மழையில் நனைந்தவர்கள்:
இனிமையான பாடல்... மிகப்பிடித்தமான பாடலும் கூட..
இதே பாட்டு தெலுங்கிலும் உண்டு. அருமை
இனிமையான மனம் மயக்கும் பாடல்... பதிவுக்கு நன்றி... யாரந்த நடிகை..?வேறு படங்களில் பார்த்தது போல் நினைவில்லை.....
அண்மையில் தான் இந்த படத்தை சன் னில் காண்பித்தார்கள்.
"நான் சாமிப்புள்ள டா" ன்னு ஜீவா சொல்வது போலவே
அந்தப் படத்தில் காயத்ரி.
"நான் பத்ரகாளிடா" ன்னு சொல்லுவாங்க.
அந்த நடிகை அந்த படம் வெளியான அடுத்த வாரத்தில் எதோ விமான விபத்தில் இறந்துட்டாங்களாம்.
தகவலுக்கு நன்றி கோவியாரே....
சூப்பர் பாட்டுக்கா!
எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இதான்!
ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தமிந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள்வரைக்கும்
***தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா***
கை-கால்ல விழுந்து தஞ்சமான, அது கொஞ்ச காலத்துல விட்டுப் போகும்!
ஆனா, நெஞ்சத்தில் தஞ்சமான வெளிய வருவது ரொம்ப கடினம்!
பொதுவா திருவடிகளில் விழுந்து தஞ்சம்-னு தான் ஒலக வழக்கு!
நெஞ்சத்தில் தஞ்சம்-னு இங்க அழகாக் கொண்டு வந்துட்டாரு கவிஞரு! :))
//கானா பிரபா said...
இதே பாட்டு தெலுங்கிலும் உண்டு//
இப்படிச் சொன்னா மட்டும் போதாது காபி அண்ணாச்சி!
ஏமி ரெஸ்பான்சிபிலிட்டி லேதா அண்ணகாருக்கி? பாட்டை இப்புடே இச்சாவா? :))
http://kannansongs.blogspot.com/2007/01/24.html
கண்ணன் பாட்டில் இட்டிருந்தேன்-கா போன வருசம்!
அங்கு SK ஐயா பின்னூட்டம்!
SK said...
இசைஞானி உருகி இசையமைத்த ஒரு சிறந்த பாடல், ரவி!
இது பற்றி, ஒரு சுவையான கருத்தை, சங்கமம் நிகழ்ச்சியின் போது, திரு. கங்கை அமரன், விஜய் டிவியில் சொன்னார்.
ஆரம்ப காலகட்டங்களில், இளையராஜா இசையமைத்த பல பாடல்களில், அவரது தாய் பாடிய தாலாட்டுகளின் பாதிப்பு இருக்குமாம்!
இப்பாடல் கூட அவர் அப்படி தாலாட்டாய்ப் பாடிய ஒரு பாடலே!
"ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ"
என்ற சந்தத்தில் இப்பாடலைப் பாடிப் பாருங்கள்; தெரியும்!
வாங்க கயல்விழி,
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
ஆஹா வாங்க பிரபா,
நீங்க மலையாளக்கரையோரம் தானே பறந்து கிட்டு இருப்பீங்க.
தெலுங்கெல்லாம் பாப்பீங்களா? :)
வாங்க தமிழ்ப் பறவை
அந்த நடிகையின் பெயர் சந்திரா.
மலையாள மங்கை.
கோவி அவர்கள் சொன்னது போல் விமான விபத்தில் இறந்து விட்டாராம்.
வாங்க கே.ஆர்.எஸ்,
சரியா சொன்னீங்க.
கை-கால்ல விழுந்து தஞ்சமான, அது கொஞ்ச காலத்துல விட்டுப் போகும்!
ஆனா, நெஞ்சத்தில் தஞ்சமான வெளிய வருவது ரொம்ப கடினம்!
ஆண்களுக்கு இந்த வரிகள் என்றால்
பெண்களுக்கு ஒரு பாடலின் வரி ஞாபகம் வருகிறது.
திருமாலின் திருமார்பில் ஸ்ரீதேவி முகமே -
திருமாலின் மார்பில் ஸ்ரீதேவி குடி இருப்பது போல் சிம்மாசனம் இட்டு அமர்ந்துவிட்டால் இணை பிரியாமல் எப்போதும் உடன் இருக்கலாம்.
அப்போதைய பாடல்கள் பல நல்ல கருத்துக்களை அப்படிக்கா தூவிக்கொண்டு சென்றுள்ளது.
பாட்ட நேனே இஸ்தானு கே ஆர் எஸ்.
வெயிட்டண்டி.
Post a Comment