மதியம் புதன், ஆகஸ்ட் 6, 2008

19.பூவே செம்பூவே..!





Get Your Own Hindi Songs Player at Music Plugin

படம் : சொல்லத்துடிக்குது மனசு
இசை : இளையராஜா
பாடல் வரிகள் : கவிஞர் வாலி



பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே...)

நிழல்போல நானும் நடைபோட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்காலபந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக்கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
என்னாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே...)

உனைப்போல நானும் ஒரு பிள்ளைதானே
பலர்வந்து கொஞ்சும் கிளிப்பிள்ளை நானே
உனைப்போல நானும் மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நாந்தான் பார்த்தாலே போதும்
இந்நாளும் எந்நாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதனொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே...)

0 இசை மழையில் நனைந்தவர்கள்: