சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா...!

Chinna Chiru Kiliye -

ஏழாவது மனிதன் திரைப்படத்தில் வரும் இந்தப் பாடல்
யேசுதாஸ், சுவர்ணலதா குரலில் கேட்டு மகிழலாம்.


சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே
பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே
அள்ளி அணைத்திடவே என் முன்னே
தேனே.. ஆடி வரும் தேனே...
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

உச்சிதனை முகர்ந்தால் கருவம்
ஓங்கி வளருதடி
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடி..
மேனி சிலிர்க்குதடி..

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடி..
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடி.
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா
உன்மத்தம் ஆகுதடி (உன்னைத் )

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

3 இசை மழையில் நனைந்தவர்கள்:

ஆயில்யன் said...

ஏதோ ஒரு கர்நாடக இசைக்கலைஞரின் வாய்ப்பாட்டில் முதன் முதலாய் நான் கேட்ட பாடல் !

அதுவும் அருமை .
இதுவும் அருமை! :)


//உச்சிதனை முகர்ந்தால் கருவம்//

சரியாக சொன்னால் கர்வம் என்று வரும்

ஆயில்யன் said...

கமெண்ட்ஸ் நீங்க தனியா பாப் அப் விண்டோ போட்டாக்கா நாங்க இசையினை ரசித்துக்கொண்டே கமெண்ட முடியும்!

G.Ragavan said...

வணக்கம் நண்பரே. மிக அழகான பாடலைக் கேட்கத் தந்தமைக்கு நன்றி.

இந்தப் பாடல் இடம் பெற்ற படம் நீதிக்குத் தண்டனை. மெல்லிசை மன்னர் இசையில் வெளிவந்த இந்தப்பாடல்தான் திரைப்படத்தில் சுவர்ணலாதாவிற்கு முதற்பாடலும் கூட.