14.செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்...!



படம் - முள்ளும் மலரும்
இசை - இளையராஜா
வருடம் - 1978
பாடியவர் - கே.ஜே.ஜேசுதாஸ்


செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து வ்ளைந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

(செந்தாழம் பூவில்...)

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

(செந்தாழம் பூவில்...)

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்கசிந்தனை
இதழில் வழியும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி

(செந்தாழம் பூவில்...)


பி.கு: புதுகைத் தென்றல் அக்காவிற்கு மிக மிக பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. அவங்களுக்காக இந்த பதிவு. நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

3 இசை மழையில் நனைந்தவர்கள்:

passerby said...

Who wrote the song Senthaazamboovil?

I also request you to tell me whether the song, 'Pagaikonda ullam thuyaraththin illam' from the film, Ellorum Nallavare' by Yesudoss?

Thanking you in ancitpation

passerby said...

Yesudoss...available in you tube?

(Pl. add the above with my earlier post)

விஜய் ஆனந்த் said...

எனக்கும் இந்த பாட்டு ரொம்ப பிடிக்குங்க...one of my all-time favourites!!!

அதிலயும்,இந்த வரிகள்...
// பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் //

// Who wrote the song Senthaazamboovil? //

?????