17.அம்மா என்றழைக்காத உயிரில்லையே...!



படம் : மன்னன்
இசை : இளையராஜா
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ்



அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில்நின்று பேசும்தெய்வம்
பெற்றதாயன்றி வேறொன்று ஏது

(அம்மா என்றழைக்காத.....)

அபிராமி சிவகாமி கருமாரி மகமாயி
திருக்கோவில் தெய்வங்கள் நீதானமா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள்வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே

(அம்மா என்றழைக்காத.....)

பசும்தங்கம் புதுவெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே

(அம்மா என்றழைக்காத.....)

6 இசை மழையில் நனைந்தவர்கள்:

சகாதேவன் said...

மிக அருமையான பாட்டு.
இசை வெள்ளத்தில் நனைந்தேன்
சகாதேவன்

வடுவூர் குமார் said...

அப்படியே ஆளை சுண்டிப்போடுகிற பாட்டு.

Anonymous said...

இந்த பாட்டை நான் வேலை செய்யும் கல்லூரியில் இரண்டு தடவை தாஸண்ணாவின் குரலை நேரடியாக கேட்கும் வாய்ப்பு (அதில் எனது பாலுஜியுடன் ஒரு நிகழ்ச்சி) ஆணி அடித்தாற் போல் அசையாமல் உட்கார வைத்த பாட்டு இது. எனது வேண்டுகோளை உடனே நிறைவேற்றிவிட்டீர்கள். மிக்க நன்றி.

Unknown said...

இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் கண்கள் குளமாகி விடும்.பெற்ற தாய்க்கு அபிராமி,சிவகாமி போன்ற பெண் தெய்வங்களை இணையாக்கி அருமையாக கவிஞர் வாலி எழுதியுள்ளார்.இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் மறைந்த என் தாயிடம் நான் நேரில் பேசுவதாகவே உணர்கிறேன்.

Mahal Periyavar. said...

அம்மாவின் பெருமைகளை இதைவிட சிறப்பாக சொல்ல முடியாது.

Mahal Periyavar. said...

அம்மாவின் பெருமைகளை இதைவிட சிறப்பாக சொல்ல முடியாது.