4. ஆகாய வெந்நிலாவே தரை மீது வந்ததேனோ...



ஆஹாய வெந்நிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளை தானோ!

ஆஹாய வெந்நிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளை தானோ!

மலர்சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய் கூட
உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட.

(ஆஹாய வெந்நிலாவே)


தேவார சந்தம் கொண்டு தினம்பாடும் தென்றல் ஒன்று
பூவாரம் சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்று.
தென் பாண்டி மன்னன் என்று திருமேனி வண்ணம் கண்டு
மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று


இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்.
கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்
கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட
நடு ஜாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட
( ஆகாய வெண்ணிலாவே )



தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
ஆதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்
வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம் கிளி பேச்சை கேட்கக் கூடும்

அடியாளின் ஜீவன் மேனி அதிகாரம் செய்வதென்ன?
அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்ன?
இசை வீணை வாடுதோ? இதமான கைகளில் மீட்ட!
ஸ்ருதியோடு சேருமோ? சுகமான ராகமே காட்ட!
(ஆகாய வெண்ணிலாவே)


படம்: அரங்கேற்ற வேளை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: யேசுதாஸ், உமா ரமணன்

1 இசை மழையில் நனைந்தவர்கள்:

சென்ஷி said...

ரொம்ப பிடிச்ச பாட்டு!