9. காக்கைச் சிறகினிலே நந்தலாலா....!

Get this widget Track details eSnips Social DNA


படம்: ஏழாவது மனிதன்
பாடியவர்:K.J.ஜேசுதாஸ்
இசை: L. வைத்தியநாதன்
இயக்கம்:K.ஹரிகரண்
வருடம்:1982

காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா

(காக்கைச் சிறகினிலே)

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

(காக்கைச் சிறகினிலே)

கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா

(காக்கைச் சிறகினிலே)

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

(காக்கைச் சிறகினிலே)

11 இசை மழையில் நனைந்தவர்கள்:

SanJai said...

very good song.. :)

நிஜமா நல்லவன் said...

வாங்க சஞ்செய். வருகைக்கு நன்றி.

Sri said...

எனக்கு ரொம்பப் பிடிச்ச பாரதியார் கவிதை அண்ணா...!! :-)

ஜோதிபாரதி said...

பாடல் உங்க பாடல் தானே பாரதி!

அன்புடன்,
ஜோதிபாரதி.

நிஜமா நல்லவன் said...

//Sri said...
எனக்கு ரொம்பப் பிடிச்ச பாரதியார் கவிதை அண்ணா...!! :-)//


வருகைக்கு நன்றி ஸ்ரீ.

நிஜமா நல்லவன் said...

//ஜோதிபாரதி said...
பாடல் உங்க பாடல் தானே பாரதி!

அன்புடன்,
ஜோதிபாரதி.//ஆஹா வாங்க வாங்க. நலமா இருக்கீங்களா? பாரதி என்று பெயர் மட்டுமே கொண்டிருக்கிறேன்:)

வருகைக்கு மிக்க நன்றி.

கானா பிரபா said...

அருமையான பாட்டு

ஆயில்யன் said...

//பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா///

அழகான பாரதியின் பாடலில் அருமையான குரலில் ஜேசுதாஸ் பாடல்கள் கேட்க தோணும் சமயங்களில் நினைக்க தோணும் பல பாடல்களில் இதுவும் ஒன்று எனக்கு!

பாரதிக்கு நன்றி :)) (ரெண்டு பாரதிக்கும்!)

நிஜமா நல்லவன் said...

வாங்க ஆயில்யன். எனக்கும் மிகவும் பிடித்த பாடல். வருகைக்கும் நன்றிக்கும் நன்றி.

நிஜமா நல்லவன் said...

//கானா பிரபா said...
அருமையான பாட்டு//


ஆஹா தல வாங்க வாங்க. வருகைக்கு மிக்க நன்றி.

தமிழ் பிரியன் said...

அழகான பாடல், அழகாக பாடியுள்ளார்... :)