11.காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து

Kaanji Pattuduthi....



காஞ்சிப்பட்டுடுத்தி கஸ்தூரிப்பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்


காஞ்சிப்பட்டுடுத்தி கஸ்தூரிப்பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்

காஞ்சிப்பட்டுடுத்தி கஸ்தூரிப்பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்
அந்த திருமகளும் உன் அழகை பெற வேண்டும்

தென் குமரி கடலினிலே சிவந்த மாலை பொழுதினிலே
பெண் குமரி நீயும் நானும் ஆடுவோம்
அங்கு பேசாத கதைகள் எல்லாம் பேசுவோம்


(தென் குமரி கடலினிலே...)

சந்தனம் பூசுவோம் செந்தமிழ் பேசுவோம்
சந்தனம் பூசுவோம் செந்தமிழ் பாடுவோம்
சந்தோஷ ஊஞ்சலிலே ஆடுவோம்
நாம் சந்தோஷ ஊஞ்சலிலே ஆடுவோம்


(காஞ்சிப்பட்டுடுத்தி...)

தேனருவிக்கரையினிலே திருக்குற்றால மலையினிலே
நீரருவி உடல் தழுவக் குளிக்கணும்
நான் நெருங்கி வந்து உன் அழகை ரசிக்கணும்
குங்குமம் போலவே உன் முகம் மாறணும்
குங்குமம் போலவே உன் முகம் மாறணும்
பொய்க்கோபம் கொண்டு நீ விலகிப்போகணும்
பொய்க்கோபம் கொண்டு நீ விலகிப்போகணும்


(காஞ்சிப்பட்டுடுத்தி...)

பூம்புகாரின் நாயகியாம் புனிதமுள்ள குணவதியாம்
கண்ணகி போல் நீ வாழ நினைக்கணும்
உன் கணவனுக்கு பெருமைகளை சேர்க்கணும்


(பூம்புகாரின் நாயகியாம்...)

மாமியார் வாழ்த்தனும் மற்றவர் போற்றனும்
மாமியார் வாழ்த்தனும் மற்றவர் போற்றனும்
இந்த மாநிலமே உன் புகழை பாடனும்
இந்த மாநிலமே உன் புகழை பாடனும்


(காஞ்சிப்பட்டுடுத்தி...)


படம்: வயசுப்பொண்ணு.

பாடியவர்கள்: யேசுதாஸ், சாவித்திரி

பாடலாசிரியர் : முத்துலிங்கம்.

இசை: மெல்லிசை மன்னர். எம்.எஸ்.விஸ்வநாதன்.

11 இசை மழையில் நனைந்தவர்கள்:

ஆயில்யன் said...

நல்ல பாட்டு :)

முழுப்பாட்டையும் இப்போதுதான் பார்க்கிறேன் (எனக்கு கேட்க முடியல பிரச்சனை உங்க பிளேயர்லதாங்க என்னோட ஸ்பீக்கரெல்லாம் நல்லாத்தான் இருக்கு!)

ஆயில்யன் said...

பாட்டின் வரிகள் சில விளம்பரமாக வந்த நாட்களில் முணுமுணுத்ததுண்டு :)

கானா பிரபா said...

//ஆயில்யன் said...
முழுப்பாட்டையும் இப்போதுதான் பார்க்கிறேன் (எனக்கு கேட்க முடியல பிரச்சனை உங்க பிளேயர்லதாங்க என்னோட ஸ்பீக்கரெல்லாம் நல்லாத்தான் இருக்கு!)//

ஆயில்ஸை கண்டிக்கிறேன், என் ஸ்பீக்கரில் சூப்பரா இந்தப் பாட்டு வருது. ஆயில்ஸ் உடனே ஸ்பீக்கரை மாத்தவும். பழசை பேரீச்சம்பழத்துக்கு போடவும்.

Unknown said...

ஹை இது என்னப் பாட்டு அண்ணா??
நான் இதுவரைக்கும் கேட்டதே இல்ல.
வரிகள் அழகா இருக்கு....!! :-)

MyFriend said...

சூப்பர் பாட்டு. :-)

pudugaithendral said...

வாங்க ஆயில்யன்,

நல்லா செக் பண்ணிட்டுத்தானே போட்டேன். :(

pudugaithendral said...

பாட்டின் வரிகள் சில விளம்பரமாக வந்த நாட்களில் முணுமுணுத்ததுண்டு :)

ஆமாம், ஆமாம்.

pudugaithendral said...

ஆயில்ஸை கண்டிக்கிறேன், என் ஸ்பீக்கரில் சூப்பரா இந்தப் பாட்டு வருது. ஆயில்ஸ் உடனே ஸ்பீக்கரை மாத்தவும். பழசை பேரீச்சம்பழத்துக்கு போடவும்.


ஆஹா நான் இல்ல, இந்த விளையாட்டுக்கு நான் வர்ல. :)

மங்களூர் சிவா said...

சூப்பர் பாட்டு. :-)

நட்புடன் ஜமால் said...

ரொம்ப லேட்டா வந்தேன் ...

எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

Unknown said...

அன்றும் இன்றும் என்றும் இனிமையான இளமையான பாடல்... கானகந்தர்வனின் காந்தக் குரலில்...