8. நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி...




நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன் ஆ ஆ ஆ ஆ..

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்.

தத்தத்தோம் தரிகிடதோம் தளாங்குதோம்.
தகதிமிதோம் தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தோம் தத்தத்
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தோம் தத்தத்.

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்... ஆஆ...

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்... ஆஆ...


பொன்னையே நிகர்த்த மேனி, மின்னையே நிகர்த்த சாயல்
பொன்னையே நிகர்த்த மேனி, மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே.. கண்ணம்மா
பின்னையே நித்ய கன்னியே..

மாரனம்புகள் என்மீது வாரி வாரி வீசடி
மாரனம்புகள் என்மீது வாரி வாரி வீசடி

கண்பாரயோ.. வந்து சேராயோ.. கண்ணம்மா.

யாவுமே சுக முனிபோல் ஈசனாம் எனக்கும் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே கண்ணம்மா,

கண்ணம்மா கண்ணம்மா

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்.

**********************************

பாடல் வரிகள் : பாரதியார்
இசை : இளையராஜா

7 இசை மழையில் நனைந்தவர்கள்:

Unknown said...

எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டுகள்-ல இதுவும் ஒண்ணு

thanks for sharing :-)

pudugaithendral said...

வாங்க தேவதை,

எனக்கும் மிகவும் பிடித்தபாடல்.

ஆயில்யன் said...

அருமையான பாட்டு அனேகமாய் பாரதியாரின் சில பாடல்கள் யேசுதாஸ் குரலில் பாடியது எல்லோரையுமே ஈர்த்திருக்கின்றது!

நன்றி

Unknown said...

//யாவுமே சுக முனிபோல் ஈசனாம் எனக்கும் தோற்றம்//

யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம் எனக்குன் தோற்ற
மேவுமே இங்கு யாவுமே கண்ணம்மா.

-இப்படி வரும்-னு நினைக்கறேன் அண்ணா..!!

G.Ragavan said...

இந்தப் பாடலுக்கு இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். உடன் பாடியவர் பி.எஸ்.சசிரேகா.

செல்வ கருப்பையா said...

எனக்கு மிகவும் பிடித்த அடிக்கடி பார்க்கும் கேட்கும் பாடல்களுள் ஒன்று. வரிகளை வெளியிட்டமைக்கு நன்றி. அற்புதமான பாடல் - மிகவும் தாமதமாகத்தான் அது இளையராஜா இல்லை MS என்று அறிந்தேன்.

Mkumar said...

இந்த பாடல் மெட்டமைத்து இசை கோர்த்தது மெல்லிசை மன்னர் MSV ஆகும்.

இளையராஜா என்பது தவறான தகவல்