மனதில் உறுதி வேண்டும்....வார்த்தையிலே தெளிவும் வேண்டும்

Get this widget | Track details | eSnips Social DNAமனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒளி படைத்த பார்வை வேண்டும்
ஞான தீபம் ஏற்ற வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்.....

இடை வரும் பலவித தடைகளை தகர்த்திங்கு வாழ்ந்து காட்ட வேண்டும்
இலக்கிய பெண்ணுக்கு இலக்கணம் நீயென யாரும் போற்றவேண்டும்
மாதர் தம்மை கேலி பேசும் மூடர் வாயை மூடுவோம்
மானம் காக்கும் மாந்தர் யாருக்கும் மாலை வாங்கி போடுவோம்
ஏசினாலும் பேசினாலும் அஞ்சிடாமல் வாழ வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்.....

சமைக்கின்ற கரமிங்கு சரித்திரம் படைப்பதை பூமி பார்க்க வேண்டும்
தூரத்து தேசத்தில் பாரத பெண்மையின் பாடு கேட்கவேண்டும்
பெண்கள் கூட்டம் பேய்கள் என்று சொன்ன சித்தர்களும்
ஈன்ற தாயும் பெண்மையென்று எண்ணிடாத பித்தர்களே
வீடு ஆளும் பெண்மையிங்கு நாடு ஆளும் காலம் வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்.....

படம்: மனதில் உறுதி வேண்டும் (1987)

பாரதியார் பாடலுக்கு இசை அமைத்தது இளையராஜா.

குரல் கொடுத்தது : கே.ஜே.யேசுதாஸ்

3 இசை மழையில் நனைந்தவர்கள்:

நட்புடன் ஜமால் said...

பாரதியின் வரிகளை கானகந்தர்வரின் குரலில் ...

விரும்பி பார்த்த படமும் கூட அதிகமாக கேட்ட பாடல்களில் ஒன்றும் கூட‌ ...

அமைதிச்சாரல் said...

ரசிச்ச படத்துலேர்ந்து ரசிச்ச கவிஞரோட பாட்டு.. பகிர்வுக்கு நன்றி தென்றல்.

சாகம்பரி said...

கேட்க கேட்க இனிமையான பாடல். ஜேசுதாஸின் தேன் குரல் கேட்பதே வரம்தான்.