ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ!!!ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ!!!
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம்- உறங்காமல் வாடுதே....
சுகம் உறவாட தேடுதே .....
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது.

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ!!!
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ.....

மாலை நேரக் காற்றில்
அசைந்தாடும் தென்னங்கீற்றே
மாலை சூடி நாளும்
என ஆளும் தெய்வம் நீயே!!

காதல் தேவி எங்கே? தேடும் நெஞ்சம் அங்கே
தேரில் போகும் தேவதை,
நேரில் வந்த நேரமே
என் உள்ளம் இன்று வானில் போகுதே!!

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ!!!
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ.....

ஏதோ நூறு ஜென்மம் ஒன்று சேர்ந்து வந்த சொந்தம்
வாழும் காலம் யாவும் துணையாக வேண்டும் என்றும்

காலம் தந்த பந்தம், காதல் என்னும் கீதம்
ஜீவனாக கேட்குதே சேர்ந்து இன்பம் கூட்டுதே
வராத காலம் வந்து சேர்ந்ததே!

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ!!!
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம்- உறங்காமல் வாடுதே
சுகம் உறவாட தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது.

படம் :ஆனந்தராகம்
பாடியவர்கள்: யேசுதாஸ், ஜானகி
இசை: இளையராஜா

12 இசை மழையில் நனைந்தவர்கள்:

அபி அப்பா said...

நான் +2 படிக்கும் போது வந்த பாவலர் கிரியேஷன்ஸ் படம். இளையராஜா பின்னி பெடல் எடுத்திருப்பாரு. ஒரு நெட்டையான சிவப்பு பையன் கைலியோடு சைக்கிள் வீட்டுக்குள்ளேயே வருவான். (கதாநாயகன்). வித்யாசமான காதல் கதை. அவங்க காதல் கல்யாணத்தை தடுக்க அந்த பெற்றோர் எடுக்கும் முடிவு அப்போ பலத்த சர்ச்சையை கிளப்பியது. நைஸ் சாங்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பல்லவி தான் பாடிக்கிட்டே இருப்பேன். மீதியெல்லாம் ஹம்மிங்க் தான்.. தேங்கஸ் ப்பா.. :)
செம டுயூன் இல்ல..

புதுகைத் தென்றல் said...

ஆஹா தகவல்களுக்கு நன்றி அபி அப்பா

புதுகைத் தென்றல் said...

ரொம்ப நன்றி கயல்.

நட்புடன் ஜமால் said...

காதல் தேவி எங்கே? தேடும் நெஞ்சம் அ(இ)ங்கே

nice song

அமைதிச்சாரல் said...

எவ்ளோ நாளாச்சு இந்தப்பாட்டையெல்லாம் கேட்டு!!.. பகிர்வுக்கு நன்றி தென்றல்.

Kovai SPB fans said...

Sema song Ravee sir. Romba naal aachu indha paata kettu

வெங்கட் நாகராஜ் said...

அருமையான பாடல்.... பகிர்வுக்கு நன்றி சகோ. இந்தப் பாடல் கேட்டு எத்தனை நாட்களாயிற்று...

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி ஜமால்

புதுகைத் தென்றல் said...

ஆமாம் அமைதிச்சாரல்,

கயலுக்கு நன்றி சொல்லணும். உசுப்பி விட்டது அவங்க தான் :))

புதுகைத் தென்றல் said...

பாலுவின் விசிறிகளின் வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு மிக்க நன்றி சகோ