வேதம் நீ..இனிய நாதம் நீ





வேதம் நீ..இனிய நாதம் நீ (2)
நிலவு நீ கதிரும் நீ..அடிமை நான் தினமும் ஓதும்
வேதம் நீ..இனிய நாதம் நீ (2)
நிலவு நீ கதிரும் நீ..அடிமை நான் தினமும் ஓதும்
வேதம் நீ..இனிய நாதம் நீ (2)


கருணை மேவும் பூவிழிப்பார்வையில்
கவிதை இன்பம் காட்டுகிறாய் (2)
இளைய தென்றல் காற்றினிலே..ஏ...
இளைய தென்றல் காற்றினிலே
இனிய சந்தப் பாட்டினிலே
இளைய தென்றல் காற்றினிலே
இனிய சந்தப் பாட்டினிலே
எதிலும் உந்தன் நாதங்களே
நினைத்த பொருள் தரும் நிரந்தர சுகம் தரும்

(வேதம் நீ..)

அண்டம் பகிரண்டம் உனை அண்டும் படி வந்தாய் (2)
தண்டை ஒலி ஜதி தருமோ கமல பாதம் சதிரிடுமோ(2)
மனமும் விழியும் தினமும் எழுதும் அழகே
மலையும் கடலும் நதியும் அறியும் வடிவே
நெஞ்சம் இது தஞ்சம் என உனைத் தினம் நினைத்தது
நித்தம் ஒரு புத்தம் புது இசைத் தமிழ் வடித்தது
ஒருமுறை தரிசனமும் தருக இசையில் உனது இதயம் இசையும்
மனம் குணம் அறிந்தவள்
குழலது சரியுது சரியுது
குறுநகை விரியுது விரியுது
விழிக்கருணை மழை அதில் நனைய வரும் ஒரு மனம் பரவும்

(வேதம் நீ..)

படம்: கோயில்புறா
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
இசை: இளையராஜா

5 இசை மழையில் நனைந்தவர்கள்:

சாந்தி மாரியப்பன் said...

கேக்க கேக்க திகட்டலை :-)

பகிர்வுக்கு நன்றி தென்றல்.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்

Anonymous said...

Kalangka vaikum Gaanam.

அம்பாளடியாள் said...

வணக்கம் நான் இன்றுதான் தங்களின் தளத்துக்கு
முதன் முதலாக வந்துள்ளேன்.அருமையான படைப்புகளை
பகிர்ந்துகொள்ளும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும்
வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.நன்றி பகிர்வுக்கு....

Unknown said...

கவிஞர் புலமைப்பித்தனின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று இந்தப்பாடல்