உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்


Get this widget | Track details | eSnips Social DNA

ஆ...ஆஅ...ஆ...ஆஆஆ.....ஆ..ஆஅ.
உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
ராகம் பல நூறு பாடும் தினம் தோறும்
காலம் நேரம் ஏதும் இல்லை.

உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்....

கண்ணில் மின்னும் காதல் ஜோதி
கன்னி மேனி மானின் ஜாதி
கண்கள் சொல்லும் காமன் சேதி
கண்டும் இன்னும் என்ன நாணம் மீதி

ஒரு மாலை தோளில் சேரும்
திருநாளில் நாணம் தீரும்
ஒரு மாலை தோளில் சேரும்
திருநாளில் நாணம் தீரும்

தொடவேண்டி கைகள் ஏங்கும்...
படவேண்டும் பார்வை எங்கும்

இந்தப் பார்வை ஒன்று போதும்...
போதும் -இடைவேளை மீதி இனி நாளை
மாலை வேளை வீணாய்ப்போகும்

இந்தப் பார்வை ஒன்று போதும்...


தயாரத்தய்ய தய்ய தயார தயாரதந்தம்

கண்னால் உன்னைக் கண்டால் போதும்
பன்னீர் பூக்கள் பந்தல் போடும்
மன்னா உன்னை மார்பில் தாங்கும்
பொன்னாள் கண்டே பெண்மை தூங்கும்

மடிமீது சாயும் சாபம்
தரவேண்டும் ஆயுள்காலம்....
மடிமீது சாயும் சாபம்
தரவேண்டும் ஆயுள்காலம்....

பலகோடி காலம் வாழ
பனித்தூவி வானம் வாழ்த்தும்

உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்....
ராகம் பல நூறு பாடும் தினம் தோறும்
காலம் நேரம் ஏதும் இல்லை.


படம் : உன்னை நான் சந்தித்தேன்.
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ், வாணிஜெயராம்

7 இசை மழையில் நனைந்தவர்கள்:

நட்புடன் ஜமால் said...

:)

சேக்காளி said...

இந்த பாடலை பாடியது ஜெயசந்திரன் அல்லவா?

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி ஜமால்

புதுகைத் தென்றல் said...

இல்லீங்க சேக்காளி இந்தப் படத்தில் இந்தப் பாட்டையும் ஹே ஐ லவ் யூ பாடலையும் பாடியது யேசுதாஸ்.

கானா பிரபா said...

நல்ல பாட்டு, படமும் கூட

கோவை2தில்லி said...

இனிமையான பாடல்.பகிர்வுக்கு நன்றிங்க.

VEERA RINGS said...

ஆம்..சரியே