மலைச்சாரலில் இளம் பூங்குயில்

Get this widget | Track details | eSnips Social DNA

மலைச்சாரலில் இளம் பூங்குயில்
அதன் மார்பினில் ஒரு ஆண்குயில்
அது நானல்லவா... துணை நீயல்லவா!!!
அன்பு கீதம் நாம் பாடும் நாளல்லவா!!!

ஆ....ஆ....ஆ...ஓ...ஓ.ஓ

ஈரேழு ஜென்மத்தின் பந்தம் இது
ஒரு இழை கூட பிரியாத சொந்தம் இது
தெய்வீகம் பெண்ணாக நேர் வந்தது
எந்தன் திருவீதி வழித்தேடி தேர்வந்ததோ!!

தொடும் உறவானது... தொடர்கதையானது!!
இந்த நாதம் கலையாத இசையானது.

மலைச்சாரலில் இளம் பூங்குயில்
அதன் மார்பினில் ஒரு ஆண்குயில்
அது நானல்லவா... துணை நீயல்லவா!!!
அன்பு கீதம் நாம் பாடும் நாளல்லவா!!!

ஆ....ஆ....ஆ.....ஆ....
ல்ல ல்லா ல்ல்லால்லா

பனிதூங்கும் மலரே உன் மடி என்பது
இரு கனிதூங்கும் தேன் திராட்சை கொடி என்பது
நினைத்தாலும் அனைத்தாலும் கொதிக்கின்றது
அதில் நான் தேடும் இன்பங்கள் உதிக்கின்றது
விழி சிரிக்கின்றது.... கவி படிக்கின்றது
திருமேனி தாளாமல் நடிக்கின்றது

மலைச்சாரலில் இளம் பூங்குயில்
அதன் மார்பினில் ஒரு ஆண்குயில்
அது நானல்லவா... துணை நீயல்லவா!!!
அன்பு கீதம் நாம் பாடும் நாளல்லவா!!!

லலலாலலாலால்லாலா

படம் : ஒரு குடும்பத்தின் கதை
பாடியவர். கே.ஜே.யேசுதாஸ்
இசை: சங்கர் கணேஷ்

7 இசை மழையில் நனைந்தவர்கள்:

கானா பிரபா said...

கலக்கல் பாட்டு பாஸ், எனக்குப் பிடித்தமானதுகளில் ஒன்று

கானா பிரபா said...

மலைச்சாரலில் இளம் பூங்குயில்னு திருத்துங்க

அமைதிச்சாரல் said...

நல்ல பாடல்.. பகிர்வுக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பாடல் பகிர்வுக்கு நன்றி சகோ... சத்தமில்லாத இரவில், மெல்லிய ஒலியில் யேசுதாஸ் பாட்டு கேட்பதில் உள்ள இனிமை....ம்ம்ம்ம்.... என்ன சுகம்...:)

புதுகைத் தென்றல் said...

நன்றி பாஸ்,

திருத்திட்டேன். நன்றி

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்

புதுகைத் தென்றல் said...

சத்தமில்லாத இரவில், மெல்லிய ஒலியில் யேசுதாஸ் பாட்டு கேட்பதில் உள்ள இனிமை....ம்ம்ம்ம்.... என்ன சுகம்...:)//

சுகமோ சுகம் தான். வருகைக்கு நன்றி சகோ