மதியம் வியாழன், ஏப்ரல் 29, 2010

இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவை...!



படம்: நீதிக்கு தலைவணங்கு
இசை: M.S.விஸ்வநாதன்
பாடியவர்: K.J.ஜேசுதாஸ்



இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத்
தொட்டிலில் கட்டிவைத்தேன்
அதில் பட்டுத் துகிலுடன் அன்னச்சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட


(இந்த பச்சைக்கிளிக்கொரு....)


எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட


(இந்த பச்சைக்கிளிக்கொரு....)


தூக்க மருந்தினை போன்றவரை பெற்றவர்
போற்றும் புகழுறைகள்
நோய் தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர்
கூறும் அறிவுரைகள்


(இந்த பச்சைக்கிளிக்கொரு....)


ஆறு கரை அடங்கி நடந்திடில்
காடு வளம் பெறலாம்
தினம் நல்ல நெறிக்கண்டு பிள்ளை வளர்ந்திடில்
நாடும் நலம் பெறலாம்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட


(இந்த பச்சைக்கிளிக்கொரு....)


பாதை தவறிய கால்கள் விரும்பிய
ஊர் சென்று சேர்வதில்லை
நல்ல பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவள்
பேர் சொல்லி வாழ்வதில்லை


(இந்த பச்சைக்கிளிக்கொரு....)


நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட

4 இசை மழையில் நனைந்தவர்கள்:

*இயற்கை ராஜி* said...

ம்ம்.. நல்ல பாட்டு... நன்றி

நட்புடன் ஜமால் said...

அண்ணே சூப்பர் பாட்டு ...


[[எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே ]]

மிகவும் இரசித்த வரிகள் ...

app_engine said...

இந்தப்பச்சைக்கிளிக்கொரு - இசை அமைத்தவர் எம் எஸ் விஸ்வநாதன்.

எம்ஜியார் படங்கள் எதற்கும் இளையராஜா இசை அமைத்ததில்லை!

நிஜமா நல்லவன் said...

/ app_engine said...

இந்தப்பச்சைக்கிளிக்கொரு - இசை அமைத்தவர் எம் எஸ் விஸ்வநாதன்.

எம்ஜியார் படங்கள் எதற்கும் இளையராஜா இசை அமைத்ததில்லை!/

தகவலுக்கும் தவறை சுட்டியதற்கும் மிக்க நன்றி.