பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்...


Get Your Own Hindi Songs Player at Music Plugin


ஹே ஹே ஹோ ஹோ ல்லா லா லா
ஹே ஹே ஹோ ஹோ ல்லா லா லா
ஓ ஓ ஓ ஓ ஓ

பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
நான் தான் அதன் ராகம் தாளம் கேட்டேன்
தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்.

தூரத்தில் போகின்ற மேகங்களே
தூரல்கள் போடுங்கள் பூமியிலே
வேர்கொண்ட பூஞ்சோலை நீர்கொண்டு ஆட
ஏரியில் மீன் கொத்தும் நாரைகளே
இறகுகள் எனக்கில்லை தாருங்களே
ஊர்விட்டு ஊர் சென்று காவியம் பாட..

பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே...

(பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்)

பந்தங்கள் யாவும் தொடர்கதைப்போல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளாய்
நூழிலைப் போல் இங்கு பாலுடன்
நெய்யென கலந்திடும் நாள்..

தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகள் மேவி
பிள்ளைகள் பேணி வளர்ந்ததுதிங்கே
மண்னில் இதைவிட சொர்க்கம் எங்கே

நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை.
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை.
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திகழ்த்திட


பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
நான் தான் அதன் ராகம் தாளம் கேட்டேன்
தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்.

பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்...
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்.

1 இசை மழையில் நனைந்தவர்கள்:

S.Arockia Romulus said...

WOW What a SONG.............from "God Of SONGS"