கலைவாணியே. உனைத்தானே அழைத்தேன்... உயிர்த்தீயை வளர்த்தேன்..

கானக்கந்தர்வனில் 100வது பாடல் பதிவாக
இந்த்ப்பாடல்
கலைவாணியே... கலைவாணியே...
உனைத்தானே அழைத்தேன்... உயிர்த்தீயை வளர்த்தேன்..
வர வேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன் பலமுறை
நினைத்தே அழுதேன் இசை தரும் கலைவாணியே...
உனைத்தானே அழைத்தேன்... உயிர்த்தீயை வளர்த்தேன்..
வர வேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன் பலமுறை
நினைத்தே அழுதேன் இசை தரும் கலைவாணியே...

சுரம் பாடி சிரித்தாய் சிரிப்பாலே எரித்தாய்
மடிமீது மரித்தேன் மறுஜென்மம் கொடுத்தாய்
சிறு விரல்களில் தலைகோதி மடிதனில் எனை வளர்த்தாய்
இசை எனும் வரம் வரும் நேரம் திசை சொல்லவில்லை மறந்தாய்
முகம் காட்ட மறுத்தாய்.. ஆ....
முகம் காட்ட மறுத்தாய்.. முகவரியை மறைத்தாய்
நீ முன் வந்து பூச்சிந்து விழித்துளிகள்
தெரிக்கிறது துடைத்துவிடு.. கலைவாணியே..


உனைத்தானே அழைத்தேன்... உயிர்த்தீயை வளர்த்தேன்..
வர வேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன் பலமுறை
நினைத்தே அழுதேன் இசை தரும் கலைவாணியே...

உள்ளம் அழுதது உன்னை தொழுதது உனது உயிரில் இவன் பாதி
கங்கை தலையினில் மங்கை இடையினில் சிவனும் இவனும் ஒரு ஜாதி
ராமன் ஒருவகை கண்ணன் ஒருவகை இரண்டும் உலகில் சமநீதி
அங்கே திருமகள் இங்கே கலைமகள் அவளும் இவளும் சரிபாதி
க்ண்ணீர் பெருகியதே... ஆ....
கண்ணீர் பெருகிய கண்ணில் உன்முகம் அழகிய நிலவென மிதக்கும்
உயிரே உயிரின் உயிரே அழகே அழகின் அழகே
இனி அழ வலுவில்லை விழிகளில் துளியில்லை
இனியொரு பிரிவில்லை துயர் வர வழியில்லை.. வருவாய்..

படம் : சிந்து பைரவி
இசை : இளையராஜா
பாடியவர் : KJ ஜேசுதாஸ்

14 இசை மழையில் நனைந்தவர்கள்:

Covai Ravee said...

சூப்பர் பாடல் நூறாவது பாடலுக்கு அருமையான தெரிவு வாழ்த்துக்கள்.

சென்ஷி said...

நூறாவது பதிவுக்கு கானகந்தவர்வக்குரலோனின் ரசிகர்கள் சார்பாய் வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மிக மிகப் பிடித்தப் பாடல்.. தெரிவு மிக அற்புதம்.. மிக்க நன்றி..

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் !

இந்த பாட்டு இப்பத்தான் வருதா???? இல்
100 வது பதிவுக்கு வெயிட்டீங்கல வைச்சிருந்தீங்களா

சென்ஷி said...

//முகம் காட்ட மறுத்தாய்.. முகவரியை மறைத்தாய்
நீ முன் வந்து பூச்சிந்து விழித்துளிகள்
தெரிக்கிறது துடைத்துவிடு.. கலைவாணியே..//

கலக்கல்.. அதுவும் யேசுதாசின் குரல்ல கனமாகுற மனசை இத்தனை குதூகுலப்படுத்தறது இந்தப் பாட்டு.. மீண்டும் மீண்டும் நன்றி!

(தெரிக்கிறது - தெறிக்கிறது... திருத்தம்)

அமைதிச்சாரல் said...

100-க்கு வாழ்த்துக்கள். பொருத்தமான பாட்டுதான். முழுவதும் ஆரோகணத்திலேயே இருப்பதாக படத்தில் ஒரு டயலாக் வரும்.

புதுகைத் தென்றல் said...

நன்றி ரவி

புதுகைத் தென்றல் said...

நன்றி சென்ஷி

மாத்திடறேன்.

புதுகைத் தென்றல் said...

ஆமாம் பாஸ்,

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

ஆமாம் அமைதிச்சாரல் அப்படி
நானும் கேள்விப்பட்டிருக்கேன்

வருகைக்கு நன்றி

நட்புடன் ஜமால் said...

அங்கே 600 இங்கே 100

அடிச்சி ஆடுங்க யக்கோவ்

வாழ்த்துகள்!

Jeeves said...

:) அருமையானது. போஸ்டினதுக்கு நன்றி

தேவன் மாயம் said...

100 ஆவது பதிவு
600 ஆவது பதிவு/ அடேங்கப்பா! எப்படி இப்படியெல்லாம் ? எனக்கு மட்டும் சொல்லுங்களேன்!!

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள் !

அநன்யா மஹாதேவன் said...

மிக அருமையான பாடலை 100வது பதிவிற்கு தேர்வு செயததற்கு வாழத்துக்கள் அக்கா.. எனக்கு மிகவும் பிடித்த பாடல்!