ஆராரிரோ பாடியதாரோ? தூங்கிப்போனதாரோ யாரோ யாரோ


Get Your Own Hindi Songs Player at Music Plugin


ஆராரிரோ பாடியதாரோ?
தூங்கிப்போனதாரோ
யாரோ யாரோ......


என் தாயோ யாரோ
என் தெய்வமே இது பொய்த்தூக்கமா??
நான் தூங்கவே இனி நாளாகுமா?


நீ முந்திப்போனது நியாயம் இல்லையே
நான் முந்திப்போகவே யோகம் இல்லையே
கூட்டை விட்டுத் தாய்க்கிளி பறந்தது எங்கே
பசித்தவன் கேட்கிறேன் பால்சோறு எங்கே
என் தேவியே நான் செய்த குற்றம் என்ன கூறு?
ஒரு பார்வை பாரு..

ஆராரிரோ பாடியதாரோ?
தூங்கிப்போனதாரோ
யாரோ யாரோ.....
என் தாயோ யாரோ


பொழுதாகிப்போனதே இன்னும் தூக்கமா?
சொல்லாமல் போவது தாயே நியாயமா?
உயிர்த்தந்த தேவிக்கு உயிர் இல்லையோ
பால் ஊத்திப் பாத்தியே பால் ஊத்தலாமோ
அன்னம் போட்ட என் தாயே உனக்கு
அரிசி போட வந்தேன் எனை நானே நொந்தேன்.

ஆராரிரோ பாடியதாரோ?
தூங்கிப்போனதாரோ
யாரோ யாரோ.....
என் தாயோ யாரோ

என் தெய்வமே இது பொய்த்தூக்கமா??
நான் தூங்கவே இனி நாளாகுமா?


ஆராரிரோ பாடியதாரோ?
தூங்கிப்போனதாரோ
யாரோ யாரோ.....
என் தாயோ யாரோ

10 இசை மழையில் நனைந்தவர்கள்:

Anonymous said...

super song

அமைதிச்சாரல் said...

ஆஹா.. அருமை.

சென்ஷி said...

ஒரு மாதிரி மனசைப் பிசையற பாட்டு.. கானகந்தர்வனோட குரல்ல தவிர்க்க முடியாத தவிக்க விட வைக்குற பாட்டு..

சுல்தான் said...

கேட்க கேட்க இனிமை. ஒரு சிலருக்கே இறைவன் கொடுத்த குரல் வளம்

புதுகைத் தென்றல் said...

நன்றி சின்ன அம்மிணி

Covai Ravee said...

என் மனதையும் உருக்கிய பாடல். பகிர்விற்க்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

நன்றி அமைதிச்சாரல்

புதுகைத் தென்றல் said...

அழகாச் சொன்னீங்க சென்ஷி,

சோகப்பாடல்களில் கானக்கந்தர்வனின் குரல் இன்னும் சூப்பரா இருக்கும்

புதுகைத் தென்றல் said...

ஆமாங்க சுல்தான்,

இறைவன் நமக்கு கொடுத்த வரம் கானக்கந்தர்வன்

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி ரவி