நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்...!





படம்: பாட்டு வாத்தியார்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J ஜேசுதாஸ் & சுவர்ணலதா



ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம...ம்ம்ம்ம்ம...
ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்...

நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்

நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இன்று உதயமாகி வருதோ
உனது தாகம் விளைய
இது அடிமையான மனதோ


(நீதானே நாள்தோறும்......)


ஊற்றுப் போலவே பாட்டு வந்ததே
உன்னைக் கண்டதாலே
பாவை என்னையே பாட வைத்ததே
அன்பு கொண்டதாலே
உன்னைப் பார்க்கையில் என்னைப் பார்க்கிறேன்
உந்தன் காந்தக் கண்ணில்
நன்றி சொல்லியே என்னை சேர்க்கிறேன்
இன்று உந்தன் கையில்
எந்தன் ஆவல் தீருமோ
உந்தன் பாத பூஜையில்
இந்த ஜீவன் கூடுமோ
உந்தன் நாத வேள்வியில்
எண்ணம் நீ வண்ணம் நீ
இங்கும் நீ எங்கும் நீ
வேதம் போலே உந்தன் பேரை
ஓதும் உள்ளம் தான்


(நீதானே நாள்தோறும்.....)


நாத வெள்ளமும் கீத வெள்ளமும்
வாரித் தந்த நீ
நாளும் என்னையே வாழவைக்கவே
வாசல் வந்த நீ


வீணை தன்னையே கையில் ஏந்திடும்
ஞானவல்லியே நீ
வெள்ளைத் தாமரை பூவில் மேவியே
ஆளும் செல்வியே நீ
எந்தன் வாக்கு மேடையில்
இன்று ஆடும் வாணியே
எந்த நாளும் மேன்மையில்
என்னை ஏற்றும் ஏணியே
அன்னை நீ அல்லவா
இன்னும் நான் சொல்லவா
நீதான் தெய்வம் ...நீதான் செல்வம்
கீதம் சங்கீதம்


நீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இன்று உதயமாகி வருதோ
உனது தாகம் விளைய
இது அடிமையான மனதோ


நீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்

6 இசை மழையில் நனைந்தவர்கள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இந்தப் பாடல் எனக்கும் பிடித்தப் பாடல் பாரதி!
இட்டது நன்று!

archu said...

I like this song very much.thanks a lot.

பாலராஜன்கீதா said...

இந்தப் பாடல் எங்களுக்கும் மிகவும் பிடிக்கும். இடுகைக்கு நன்றி.

S.Arockia Romulus said...

இசை வேந்தன் கே.ஜே.யேசுதாஸ்


தெய்வீகக் குரலோனே! தெய்வத்தாயே!
சபரியில் ஐயப்பனையும், குருவாரூரில்
குருவாரூரப்பனையும் துகிலுறச் செய்வது உன் தாலாட்டுக் குரலல்லவா!!எனவேத் தான் நீ தெய்வத்தாயானாய்!
உன் வறுமையை திறமையுடன் விதைத்து
பெருமையை அறுவடைச் செய்தவன் நீ!!
உன் குரலெனும் மகுடி கொண்டு மக்கள்
மனங்களை தன் வசமாக்கினாய்!
உன்னை சாதிக்கொண்டு சிறையிட்டனர்
நீயோ 'சாதி'த்து அந்த சிறையுடைத்து
பவணி வந்தாய் இந்த அவணி மீது!
ஏழிசை உட்கொண்டு குரல் யாழிசையாய் பொழிகின்றாய்!
இசைக்கிசையாத உயிருமுண்டோ?! -உன்
குரலுக்கு குளிராத இதயமுண்டோ?
இனிய இசைவாழ! நீ வாழியப் பல்லாண்டு!!!!

pudugaithendral said...

ஆரோக்கிய ரோமுலஸ்,

இசை வேந்தனுக்கான கவிதை அருமை.

மனமார்ந்த பாராட்டுக்கள்

HS said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்