உன் பார்வையில் ஓராயிரம்...!படம்: அம்மன் கோவில் கிழக்காலே
இசை: இளையராஜா
பாடியவர்: K.J.ஜேசுதாஸ் & சித்ரா

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்

(உன் பார்வையில்)

அசைத்து இசைத்தது வளைக்கரம் தான்
இசைந்து இசைத்தது புது ஸ்வரம் தான்
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலி தான்
கழுத்தில் இருப்பது வலம்புரி தான்
இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்
மனதை மயிலிடம் இழந்தேனே
மயங்கி தினம் தினம் விழுந்தேனே
மறந்து பிறந்து பறந்து தினம் மகிழ

(உன் பார்வையில்)

அணைத்து நனைந்தது தலையணைதான்
அடுத்த அடியென்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத்தான்
இடுப்பை வளைத்தெனை அணைத்திடத்தான்
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகத்திரை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய

(உன் பார்வையில்)

6 இசை மழையில் நனைந்தவர்கள்:

நட்புடன் ஜமால் said...

நல்ல பாடல் நல்லவரே

கானா பிரபா said...

கலக்கல் பாட்டு பாஸ் ;)

புதுகைத் தென்றல் said...

சூப்பர் பாட்டுக்கு நல்லவருக்கு பாராட்டுக்கள்

ஸ்ரீமதி said...

கலக்கல் பாட்டு அண்ணா :))

Surya Prakash said...

மறந்து இருந்து என வர வேண்டும் மாற்றுங்கள்

வரிகள் கங்கை அமரன்

Surya Prakash said...

மறந்து இருந்து என வர வேண்டும் மாற்றுங்கள்

வரிகள் கங்கை அமரன்