பூவாடைக் காற்றே... சுகம் கொண்டுவா...


Get Your Own Hindi Songs Player at Music Plugin


பூவாடைக் காற்றே சுகம் கொண்டு வா
பனி நீராடும் பூவே மணம் கொண்டு வா
பழகும் கிளிகள் இங்கு பறக்கின்றதே
சிறகை விரித்து விண்ணை மறைக்கின்றதே

(பூவாடைக் காற்றே)

சொர்க்கத்தை மண் மீது
காண்கின்றோம் இப்போது
ஓடும் மேகங்களே
உடைகள் ஆகுங்களேன்
ஓடும் மேகங்களே சொல்லுங்களேன்
உடைகள் ஆகுங்களேன் நில்லுங்களேன்
வசந்தம் எங்கள் வாழ்விலே

(பூவாடைக் காற்றே)

ஆகாகா ஆனந்தம்
பூலோகம் பூமஞ்சம்
இன்பம் எங்கும் கொள்ளை
அள்ளக் கைகள் இல்லை
இன்பம் எங்கும் கொள்ளை யாருமில்லை
அள்ளக் கைகள் இல்லை நேரமில்லை
குழந்தை செய்த சாதனை

(பூவாடைக் காற்றே)


படம்: மை டியர் குட்டிச்சாத்தான்
இசை: இளையராஜா
பாடியவர்: ஜேசுதாஸ்

1 இசை மழையில் நனைந்தவர்கள்:

நட்புடன் ஜமால் said...

இது இவர் பாடிய பாட்டா.

அப்பள்ளாம் தெரியலை.

ஆனா எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.