மேகம் கருக்குது மழை வர பார்க்குது..!படம்: ஆனந்த ராகம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ் & S.ஜானகி

மாமரச்சோலையில் பூமழை தேடுது
மழை மேகம் வர வேண்டும்
சில்லுன்னு காத்தடிச்சா சந்தோஷம் சேருது..
சில்லுன்னு காத்தடிச்சா சந்தோஷம் சேருது..

மேகம் கருக்குது மழை வர பார்க்குது
வீசியடிக்குது காத்து காத்து

ஏன் நிறுத்திட்டீங்க? பாட்டு நல்லா இருக்கு
இன்னொரு தடவை பாடுங்களேன்
அது.. அது வந்து..
இந்த பாட்டு எதுக்கு உங்களுக்கு?
பாட்டு ரொம்ப நல்லா இருக்கு
கேட்கணும் போல ஆசையா இருக்கு
அட.. பாடுங்கண்ணா..

மேகம் கருக்குது மழை வர பார்க்குது
வீசியடிக்குது காத்து
காத்து மழை காத்து
காத்து மழை காத்து

(மேகம் கருக்குது...)

ஒயிலாக மயிலாடும் அலை போல
மனம் பாடும்

(மேகம் கருக்குது...)

தொட்டு தொட்டு பேசும் சிட்டு
துள்ளி துள்ளி ஓடுவதென்ன

(தொட்டு தொட்டு...)

தென்றல் பட்டு ஆடும் மொட்டு
அள்ளி வந்த வாசம் என்ன
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து...
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து..
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து
என்னனம்மோ ஆகிப்போச்சு
சேராமல் தீராது
வாடைக் குளிரில் வாடுது மனசு

(மேகம் கருக்குது...)

பூவுக்குள்ள வாசம் வச்சான்
பாலுக்குள்ள நெய்யை வச்சான்

(பூவுக்குள்ள..)

கண்ணுக்குள்ள என்ன வச்சான்
பொங்குதடி என் மனசு

(கண்ணுக்குள்ள..)

பார்த்த கண்ணு சொக்கி சொக்கி
பைத்தியம்தான் ஆகிப்போச்சு
நீ..
நீ வாடி நீ வாடி
ஆசை மயக்கம் போடுற வயசு

(மேகம் கருக்குது...)

5 இசை மழையில் நனைந்தவர்கள்:

நட்புடன் ஜமால் said...

நல்ல பாடல்.

புதுகைத் தென்றல் said...

மேகம் கருக்குது எப்பொழுது வானம் இருண்டாலும் என் மனது பாடும் பாடல்.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

surya Elamathi said...

Supper

surya Elamathi said...

Supper