தாஸண்ணாவின் திரையிசைத்தொகுப்புபிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா >> ஏதோ நினைவுகள் >> கண்மணி நீவர காத்திருந்தேன் >> வானம் என்னும் வீதியிலே >> விழியே கதை எழுது >>
திருமாலின் திருமார்பில் ஸ்ரீதேவி முகமே >> செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் >> அதிசய ராகம் >> கிண்ணத்தில் தேன்வடித்து >> இந்த பச்சைக்கிளிக்கொரு >>
கண்ணன் ஒரு கைக்குழந்தை.

தாஸண்ணாவின் திரையிசைத்தொகுப்பு

Get this widget | Track details | eSnips Social DNA


மேற்கண்ட கானங்கள் தாஸண்ணாவின் குரலில் எப்போது கேட்கமுடியும் என்ற தாகத்தை ஏற்படுத்தி தவிக்க வைக்கும் கானங்கள். தாஸண்ணாவின் குரல் போன்ற
கந்தர்வ குரல் எனக்கில்லையே என்று பல பாடகர்கள் ஏங்கவைக்கும் குரல் தாஸண்ணாவின் குரல். மற்ற பாடகர்களின் பாடல்களூம் கேட்கவேண்டும் ஆர்வத்தை தூண்டிய
குரல் தாஸண்ணாவின் குரல் இவர் பாடல்களில் உள்ள இனிமையில் ஒரு சதவீதம் பின்பற்றி புதுப்பாடகர்கள் பாட முயற்சித்தாலே அவர்கள் வெகு விரைவில் பிரபலமாகி
விடுவார்கள் என்பது என் கருத்து. இப்பேர்பட்ட பாடக்ரின் இனிமையான பாடல்களின் தொகுப்பு தான் இந்த வானொலித்தொகுப்பு. வழக்கம் போல் கோவையில் உள்ள
ஐந்து பண்பலைகளீலே முதன்மையாக விளங்கும் “டிஜ்ஜிடல் குரலோன்” அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயாணா அவர்களின் குரல் தாஸண்ணாவின் குரல் போன்றே
பேஸ் தன்மையை பெற்றவர். தாஸாண்ணா எப்படி கர்நாடாக பிர்காக்களையும் சந்தங்களையும் உள்ளே சென்று புகுந்து விளையாடுகிறரோ அதேபோல் திரு. ஆர்.ஜி.எல் சாரும் அவர் அறிவிப்பாளர் தொழிலில் நேயர்களை கவருவதில் வல்லவர் அவர் பாணியில் இனிமையாக பேசி அநேக நேயர்களின் உள்ளங்களையும் கொள்ளைகொண்டுள்ளார். இதுபோன்ற தளங்களில் பாடல்களின் வரிகள் எழுதினால் நன்றாக இருக்கும். ஒலித்தொகுப்பில் கிட்டத்தட்ட குறைந்தபட்சம் 10 பாடல்கள் இருக்கும் அத்தனை பாடல்களின் வரிகளூம் எழுதுவது நடைமுறையில் சாத்தியபடாத ஒன்று. தனிப்பட்ட முறையில் மற்ற தளங்களில் இந்த பாடல்களின் வரிகள் இருக்கும் அதை சேகரித்து சேர்ப்பது என்பதும்
ஆகாத காரியம். அதுமட்டுமல்லாமல் பதிவின் நீளமும் அதிகமாகிவிடும். ஆகையால் பாடல் வரிகள் இது போன்ற என் பதிவுகளில் இடம் பெறாது. அனைத்து பாடல்களையும் கேட்டாலே அறிவிப்பாளரின் பேச்சில் தானாகவே நம் மனதில் பதிந்து விடும் என்பது உண்மை. முயற்சி செய்து தரவிறக்கம் செய்டு கேட்டுத்தான் பாருங்களேன். உங்கள் உணர்வுகளை ஒரு வரியில் எழுதிவிடுங்கள் ஆக்கத்தை உருவாக்கியருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் நம்மைப் போலவே.

4 இசை மழையில் நனைந்தவர்கள்:

நட்புடன் ஜமால் said...

பாடல் கேட்கும் இடத்தில் பதிவா ...

சரி அப்பாலிக்கா படிக்கிறேன் ...

புதுகைத் தென்றல் said...

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா >> ஏதோ நினைவுகள் >> கண்மணி நீவர காத்திருந்தேன் >> வானம் என்னும் வீதியிலே >> விழியே கதை எழுது >>
திருமாலின் திருமார்பில் ஸ்ரீதேவி முகமே >> செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் >> அதிசய ராகம் >> கிண்ணத்தில் தேன்வடித்து >> இந்த பச்சைக்கிளிக்கொரு >>
கண்ணன் ஒரு கைக்குழந்தை.//

ஐயோ. அம்புட்டும் ரஅருமையான பாட்டாச்சே.

மிக்க நன்றி ரவி

புதுகைத் தென்றல் said...

ரசனையைப் பற்றி அறிவிப்பாளரின் கருத்து ரசிக்கும்படி இருக்கிறது.

Covai Ravee said...

புதுகை தென்றலாரே...

தேன் கிண்ணத்தில் அறிவிப்பாளரின் பல தொகுப்புக்கள் உள்ளன அவர் குரலுக்காகவே வித்தியாசமான ஆக்கங்களை பதிகின்றேன். தங்களூக்கு தெரியும் என்று நினைக்கிறேன். தாஸண்ணா தளத்தில் அனுமதி வழங்கியதற்க்கு மீண்டும் நன்றி. நான் ரசித்த பாடல்களும் நேரம் கிடைக்கும் போது பதிவேன்.

திரு. ஜமால் அவரக்ளே..

இது பதிவு மட்டுமல்ல பாடல் ஒலித்தொகுப்பு தான் என்ன கோப்பு ரொம்ப பெரிசு 1 மணி நேரம் ஓடும். தரவிறக்கம் செய்து கேளூங்கள் அத்துடன் கோப்பு தரம் கூட குறைவாக இருக்கும் செல்பேசியில் பதிவு செய்தது. ஆகவே பொருத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஊக்கத்திற்க்கு மிக்க நன்றி.