ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே...




Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அநாதையா..
அன்பு ஒண்ணுதான் அநாதையா..

ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அநாதையா..
அன்பு ஒண்ணுதான் அநாதையா..


யாரு இத கண்டு கொள்வார்?
கைகளிலே ஏந்திக்கொள்வார்?
சொந்தம் சொல்ல யார் வருவார்?
அன்புக்கு யார் அன்பு சொல்வார்?

ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அநாதையா..
அன்பு ஒண்ணுதான் அநாதையா..


உன்னைப் போல என்னை எண்ணினால்
நெஞ்சில் கங்கை ஆரோடுமே!
துன்பம் தீர்க்க நீயும் உன் கைகளில்
சொர்க்கம் வந்து கை கோ்ர்க்குமே!


கோவில் குளம் யாவும் இங்கே
அன்பின் அடையாளம்ல்லவா!
ஏழைக்கென்று தந்தது எல்லாம்
ஈசன் கையில் சேரும் அல்லவா!

கண்கள் இல்லா மனிதருக்கு...
கால்கள் என நாம் நடந்தால்!!!
நம் பூமியில் அநாதையா? அநாதையா?

ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அநாதையா..
அன்பு ஒண்ணுதான் அநாதையா..

மண்ணில் தானே எல்லைக் கோடுகள்
மனதில் கோடு யார் போட்டது?
பெற்றால் தானா பிள்ளை பூமியில்?
எல்லாம் எல்லாம் நம் பார்வையில்!

நாதியற்ற பூவும் இல்லை
நட்டுவைத்ததால் வந்தது.
நாதியற்றா நாம் பிறந்தோம்?
அன்னையின்றி யார் வந்தது?


எங்கிருந்தோ இங்கு வந்தோம்
வந்ததெல்லாம் சொந்தங்களே
நம் பூமியில் அநாதையா?
அநாதையா?

ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அநாதையா..
அன்பு ஒண்ணுதான் அநாதையா..


பாடியது: யேசுதாஸ்
படம்: நந்தலாலா
இசை: இளையராஜா

5 இசை மழையில் நனைந்தவர்கள்:

வடுவூர் குமார் said...

நனைஞ்சிட்டேன்....
நன்றி.

pudugaithendral said...

இசை சாரலில் தானே நனைஞ்சீங்க. ஒண்ணும் ஆகுது.

வருகைக்கு மிக்க நன்றி

MyFriend said...

அருமையான பாடல். :-)

கானா பிரபா said...

அருமையான பாடல். :-)

நட்புடன் ஜமால் said...

அட இப்படி ஒன்னுகீதா அக்காக்கு.

நம்மாளும் யேசுதாஸ் தான்.