பூ பூத்ததை யார் பார்த்தது
காதல் கூட பூவை போன்றது
மனதிலே உள்ளது மொளனமே நல்லது
வானம் வேறு நீலம் வேறு யார் சொன்னது.
பூ பூத்ததை யார் பார்த்தது
காதல் கூட பூவை போன்றது
சபலம் வந்து சேர்ந்த காதல் சாபமானது
அவலம் வந்து சேர்ந்த காதல் ஆழமானது
பருவம் வந்த போது காதல் நியாயமானது
பண்பு பார்த்து வந்த காதல் தூய்மையானது
அழகு என்பது மெழுகை போன்றது
அன்பு என்பது விளக்கைப்போன்றது
அன்பு கொண்ட உள்ளம் என்றும் மாறாதது.....
பூ பூத்ததை யார் பார்த்தது
காதல் கூட பூவை போன்றது
பறவைப்போல பறந்த வானில் பறந்து செல்கின்றோம்
பசியைக்கூட இரண்டு பேரும் பகிர்ந்து கொள்கிறோம்
உறக்கம் நம்மை பிரிப்பதில்லை தூங்கிக்கொள்கிறோம்
ஒருவர் கண்ணில் ஒருவர் மூடிக்கொள்கிறோம்
மழையில் காய்கிறோம் வெயிலில் நனைகிறோம்
மழலை பேசியே மடியில் சாய்கிறோம்
இன்னும் கொஞ்சம் எல்லை மீற நாள் பார்க்கிறோம்
பூ பூத்ததை யார் பார்த்தது
காதல் கூட பூவை போன்றது
மனதிலே உள்ளது மொளனமே நல்லது
வானம் வேறு நீலம் வேறு யார் சொன்னது.
பூ பூத்ததை யார் பார்த்தது
காதல் கூட பூவை போன்றது.......
3 இசை மழையில் நனைந்தவர்கள்:
இனிமையான பாடல்.
அழகு வரிகள் ஆழமான காதல் ... இனிமையான குரல் வளம் ...
nandri kovai2delhi
nandri dinesh
Post a Comment