இதயம் ராத்திரியில் இசையால் அமைதி பெரும்
இருக்கும் காயமெல்லாம் இசையால் ஆறிவிடும்
கொதிக்கும் பாறையிலும் இசையால் பூ மலரும்
இரும்பு பாறையிலும் இசையால் நீர் கசியும்
பழிவாங்கும் பகை நெஞ்சம் இசையால் சாந்தி பெறும்
வானமழைப்போலே புதுப்பாடல்கள்
கானமழை தூவும் முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது
நெடுநாள் வாழும் இது
குரலில் தேன்குழைத்து குயிலைப் படைத்தவர் யார்?
மனத்தை மெல்லிசையால் இழுத்தே வைத்தவர் யார்?
அலையில் பாட்டெடுப்பேன் அரங்கம் தேவையில்லை
சபையில் பேரெடுக்க குயில்கள் இசை எடுப்பதில்லை
எனக்கே நான் சுகம் சேர்க்க தினமும் நான் பாடுகின்றேன்
வானமழைப்போலே புதுப்பாடல்கள்
கானமழை தூவும் முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது
நெடுநாள் வாழும் இது
அதென்னவோ இந்தப் பாட்டு கானகந்தர்வன் தனக்காக பாடிக்கிட்டா மாதிரி தோணும் எனக்கு. :))
இதயம் ராத்திரியில் இசையால் அமைதி பெரும் வரியும் சரி
சபையில் பேரெடுக்க குயில்கள் இசை எடுப்பதில்லை, எனக்கே நான் சுகம் சேர்க்க தினமும் நான் பாடுகிறேன். இந்த இடத்தில் அவரோட குரலை நிதானமா கேட்டுப்பார்த்தா நான் சொல்வது சரியா இருக்கும்.
2 இசை மழையில் நனைந்தவர்கள்:
அமைதியான அழகான பாடலிது.. ரொம்ப அருமை.
அதென்னவோ இந்தப் பாட்டு கானகந்தர்வன் தனக்காக பாடிக்கிட்டா மாதிரி தோணும் எனக்கு. :))
இதயம் ராத்திரியில் இசையால் அமைதி பெரும் வரியும் சரி
சபையில் பேரெடுக்க குயில்கள் இசை எடுப்பதில்லை, எனக்கே நான் சுகம் சேர்க்க தினமும் நான் பாடுகிறேன். இந்த இடத்தில் அவரோட குரலை நிதானமா கேட்டுப்பார்த்தா நான் சொல்வது சரியா இருக்கும்.
வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்
Post a Comment