அகரம் இப்போ சிகரம் ஆச்சு...!படம்: சிகரம்
பாடல்: கே.ஜே.ஜேசுதாஸ்
இசை: எஸ்.பி.பி


அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப் பாடும்
புல்லாங்குழல் ஆச்சு

(அகரம் இப்போ...)

சங்கீதமே சந்நிதி
சந்தோசம் சொல்லும் சங்கதி
சங்கீதமே சந்நிதி
சந்தோசம் சொல்லும் சங்கதி

(அகரம் இப்போ...)

கார்காலம் வந்தால் என்ன?
கடும் கோடை வந்தால் என்ன?
மழை வெள்ளம் போகும்
கரை இரண்டும் வாழும்
காலங்கள் போனால் என்ன?
கோலங்கள் போனால் என்ன?
பொய் அன்பு போகும்
மெய்யன்பு வாழும்

அன்புக்கு உருவமில்லை
பாசத்தில் பருவமில்லை
வானோடு முடிவுமில்லை
வாழ்வோடு விடையுமில்லை

இன்றென்பது உண்மையே
நம்பிக்கை உங்கள் கையிலே

(அகரம் இப்போ...)

தண்ணீரில் மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே?
பசியாற பார்வைபோதும்
பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்

தலைசாய்க்க இடமாயில்லை
தலை கோத விரலாயில்லை
இளங்காற்று வரவாயில்லை
இளைப்பாறு பரவாயில்லை

நம்பிக்கையே நல்லது
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது

(அகரம் இப்போ...)

5 இசை மழையில் நனைந்தவர்கள்:

சிட்டுக்குருவி said...

super songgggg..............

நட்புடன் ஜமால் said...

அகரம் சிகரம் ஆகி ரொம்ப காலமாச்சி :P

வெங்கட் நாகராஜ் said...

எனக்கும் பிடித்த பாடல். பகிர்வுக்கு மிக்க நன்றி.

Covai Ravee said...

அகரம் சிகரம் ஆகி ரொம்ப காலமாச்சி :P
ரொம்ப சரியாக சொன்னீங்க ஜாமால். சூப்பர் பாடல்.

Lakshmi said...

suuppar paatal pakrvukku nanRi.