தேவி கூந்தலோ பிருந்தாவனம்...!

படம்: என் ஆசை உன்னோடு தான்
இசை: சங்கர்-கணேஷ்
குரல்: K.J.ஜேசுதாஸ் & வாணி ஜெயராம்
தேவி கூந்தலோ பிருந்தாவனம்
கள்ளூறும் பூக்கள் யாவுமே உன் சீதனம்
சங்கீத வீணை தானடி என் வாகனம்
என் ஆதாரம் நீயே

தேவி கூந்தலோ பிருந்தாவனம்
கள்ளூறும் பூக்கள் யாவுமே என் சீதனம்
சங்கீத வீணை தானடி என் வாகனம்
என் ஆதாரம் நீயே

பூவானது பொன்னானது
உன் பாதம் மண்மங்கை காணாதது
பூவானது பொன்னானது
உன் பாதம் மண்மங்கை காணாதது
தோள்மீது சாயும் தேனாக பாயும்
தோள்மீது சாயும் தேனாக பாயும்
கனிகள் விளைந்த கொடியில் மலர்கள் ஓராயிரம்
இளமங்கையின் கன்னத்தில் மன்மத வண்ணத்தில்
புதிய அமுதம் பொங்கிவரும்

தேவி கூந்தலோ பிருந்தாவனம்
கள்ளூறும் பூக்கள் யாவுமே என் சீதனம்
சங்கீத வீணை தானடி என் வாகனம்
என் ஆதாரம் நீயே

உன் பாதமே என் கோவிலே
உன் பேரே நான் பாடும் பூபாளமே
உன் பாதமே என் கோவிலே
உன் பேரே நான் பாடும் பூபாளமே
தோள் சேர்த்த மங்கை தேன் வார்த்த கங்கை
தோள் சேர்த்த மங்கை தேன் வார்த்த கங்கை
கனவில் விழித்து நிலவில் குளித்த சாகுந்தலை
நீ தினமும் அணைத்து நினைவில் நிறுத்து
இதயம் திறந்து வந்தவளை

தேவி கூந்தலோ பிருந்தாவனம்
கள்ளூறும் பூக்கள் யாவுமே என் சீதனம்
சங்கீத வீணை தானடி என் வாகனம்
என் ஆதாரம் நீயே

லால்ல லாலலலா லல்லா லலா..!

1 இசை மழையில் நனைந்தவர்கள்:

*இயற்கை ராஜி* said...

:-) mm.. nadakatum..nadakatum:-)