வானம் அருகில் ஒரு வானம்...!

படம்: நியாய தராசு
இசை: சங்கர்- கணேஷ்
குரல்: K.J.ஜேசுதாஸ்


வானம் அருகில் ஒரு வானம்
தரையில் வந்த மேகம்
தலை துவட்டி போகும்
கானம் பறவைகளின் கானம்

(வானம் அருகில் ஒரு வானம்...)

ஏழாண்டு காலம் இவள் ஊர் பார்த்ததில்லை
கார் போகும் சாலை இவள் கால் பார்த்ததில்லை
இன்றல்லவோ மண் பார்க்கிறாள்
இடைவேளையில் பண் கேட்கிறாள்
இமை ரெண்டும் ஆட மறந்து விட்டால்
வெளியேறினாள் கிளியாகினாள்

(வானம் அருகில் ஒரு வானம்...)

பூலோகம் சுகமே இந்த பொய் வாழ்க்கை சுகமே
பூந்தோட்டம் சுகமே அட போராட்டம் சுகமே
இவள் காண்பது புது தேசமா
இவள் கொண்டது மறு ஜென்மமா
கடந்து சென்ற காலம் கை வருமா
கண்ணீரிலே சந்தோஷமா

(வானம் அருகில் ஒரு வானம்...)

3 இசை மழையில் நனைந்தவர்கள்:

நட்புடன் ஜமால் said...

எங்க ராஸா தேடிப்பிடிக்கிறீங்க

இப்படி ஒரு பாடல் கேட்ட நினைவே இல்லை.

புதுகைத் தென்றல் said...

thanks nijams thambi. manathai varudum padal

*இயற்கை ராஜி* said...

kalakareenga nijams anna:-)