வாழ்வே மாயம்! இந்த வாழ்வே மாயம்!


Get Your Own Hindi Songs Player at Music Plugin




படம் : வாழ்வே மாயம்
இசை : கங்கை அமரன்
வரிகள் : வாலி
குரல் : K.J.ஜேசுதாஸ்
------------------------------------------------------------------

வாழ்வே மாயம்! இந்த வாழ்வே மாயம்!
தரை மீது காணும் யாவும், தண்ணீரில் போடும் கோலம்!
நிலைக்காதம்மா...!
யாரோடு யார் வந்தது? நாம் போகும்போது,
யாரோடு யார் செல்வது?
(வாழ்வே)


யாரார்க்கு என்ன வேஷமோ? இங்கே
யாரார்க்கு எந்த மேடையோ?
ஆடும் வரைக் கூட்டம் வரும்,
ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்!
தாயாலே வந்தது தீயாலே வெந்தது!
தாயாலே வந்தது தீயாலே வெந்தது!
மெய் என்று மேனியை யார் சொன்னது?
(வாழ்வே)


பிறந்தாலும் பாலை ஊற்றுவார், இங்கே
இறந்தாலும் பாலை ஊற்றுவார்
உண்டாவது ரெண்டாலதான்!
ஊர்போவது நாலாலதான்!
கருவோடு வந்தது, தெருவோடு போவது!
கருவோடு வந்தது, தெருவோடு போவது!
மெய் என்று மேனியை யார் சொன்னது?
(வாழ்வே)


நாடகம் விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா!
வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும் வேலை நெருங்குதம்மா!
பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா!
தாய் கொண்டு வந்ததை, தாலாட்டி வைத்ததை,
நோய் கொண்டு போகும் நேரமம்மா!


(வாழ்வே)

8 இசை மழையில் நனைந்தவர்கள்:

ஆயில்யன் said...

இந்த பாட்டை எப்பொழுது கேட்டாலும் எனக்கு ஒரு விசயம் ஞாபகத்துக்கு வரும் பாஸ்!

சிதம்பரத்துல மயிலாடுதுறைக்கு போற பஸ்ஸு டெய்லி டூட்டி மாத்திட்டு கிளம்பும்போது இந்த பாட்டை போட்டு டெரராத்தான் கெளப்புவாங்க! :)

Iyappan Krishnan said...

செம ஃபீலிங்க் சாங்க்ஸ்... கமல் நிஜமாவே உடம்புக்கு முடியலையோன்னு வருத்தத்தோட பாத்திருந்த காலங்களும் உண்டு :))

Pattu & Kuttu said...

good song.. pl add the song the "kulanthi padum thalau" in one of ur blog..

VS Balajee

சசிகுமார் said...

சுவாரஸ்யமான பதிவு. தொடர்ந்து மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Sakthikumar Rangaiyan said...

It's nice to hear Thathuva Paadalgal in Vaali - KJY combination after TMS - Kannadasan combination.

பனித்துளி சங்கர் said...

வாழ்த்துக்கள் பகிர்வுக்கு நன்றி !

மீண்டும் வருவான் பனித்துளி !

பனித்துளி சங்கர் said...

அய்யோ என்னை காப்பாற்ற யாருமே இல்லையா ?????????????????


மீண்டும் வருவான் பனித்துளி !

சாந்தி மாரியப்பன் said...

அருமையான பாடல்.கமல் அழகாக உயிர் கொடுத்திருப்பார் அந்த பாடலுக்கு.

விகடனில் வந்ததுக்கு இங்கேயும் வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன்.