பாட வந்ததோ கானம் பாவை கண்ணிலோ நாணம்...!


Get Your Own Hindi Songs Player at Music Plugin

படம்: இளமைக்காலங்கள்
பாடியவர்கள்: K.J.யேசுதாஸ் & P.சுசீலா


பாட வந்ததோ கானம் பாவை கண்ணிலோ நாணம்
பாட வந்ததோ கானம் பாவை கண்ணிலோ நாணம்
கள்ளூறும் பொன் வேளை தள்ளாடும் பெண் மாலை
இளமை வயலில் அமுதமழை விழ

(பாட வந்ததோ)

ராஜமாலை தோள்சேரும் நாணமென்னும் தேனூறும்
ராஜமாலை தோள்சேரும் நாணமென்னும் தேனூறும்
கண்ணில் குளிர்காலம் நெஞ்சில் வெயில்காலம்
கண்ணில் குளிர்காலம் நெஞ்சில் வெயில்காலம்
அன்பே அன்பே என்னாளும் நானுந்தன் தோழி
பண்பாடி கண்மூடி
உனது மடியில் உறங்கும் ஒரு கிளி

(பாட வந்ததோ)

மூடிவைத்த பூந்தோப்பு காலம் யாவும் நீ காப்பு
மூடிவைத்த பூந்தோப்பு காலம் யாவும் நீ காப்பு
இதயம் உறங்காது இமைகள் இறங்காது
இதயம் உறங்காது இமைகள் இறங்காது
தேனே தேனே கங்கைக்கு ஏனிந்த தாகம்
உல்லாசம் உள்ளூறும்
நதிகள் விரைந்தால் கடலும் வழிவிடும்

(பாட வந்ததோ)

3 இசை மழையில் நனைந்தவர்கள்:

tamiluthayam said...

மனதை வருடும் இசை ஞாபகங்களை வழங்கும் பொக்கிஷம் உங்கள் பதிவு. அறிதான, அதிகம் பிரபலமாகாத. அற்புதமான பாடல்களை உங்களூக்கு அனுப்பி வைக்கிறேன்

Information said...

Nicely posted

Linga Linga said...

மனதிற்கு பிடித்த இதமான கானம்