ஒரு எழை வெச்ச வாழைமண்ணுக்கேத்த மைந்தன் படத்தில் தாஸண்ணா அவர்கள் பாடிய ஒரு செமி சோகப்பாட்டு ரொம்ப நாட்களாக என் கோப்பில் இருந்தது இன்று தான் இந்த தளத்தில் பதிய நேரம் கிடைத்தது. இனிமையான பாடல் கேட்டு மகிழுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

படம்:மண்ணுக்கேத்த மைந்தன்
பாடியவர்: டாக்டர் கே.ஜே.யேசுதாஸ்
நடிகர்:ராமராஜன்
இசை:தேவா

ஒரு எழை வெச்ச வாழை அந்த வாழை வளரும் வேளை
ஒரு எழை வெச்ச வாழை அந்த வாழை வளரும் வேளை

ஒரு எழை வெச்ச வாழை அந்த வாழை வளரும் வேளை
ஒரு எழை வெச்ச வாழை அந்த வாழை வளரும் வேளை
அதை காலை ஒடித்தவன் கடவுள் என்பவன் கருணையில்லா கோழை
சொல்லடி கிளியே கிளியே சொன்னது தவறா கிளியே
சொல்லடி கிளியே கிளியே சொன்னது தவறா கிளியே
ஒரு எழை வெச்ச வாழை அந்த வாழை வளரும் வேளை

ஏழை குடிசையிலே ஈச்சம் பாய் கிழிச்சலிலே
தானா விளக்கெறிய கருப்பான மத்தியிலே
ரோசாப்பூ போல் பொறந்த என் ராசாத்தி கண்மணியே
கையசைக்கும் நந்தவனம் கண்ணு ரெண்டும் நட்சத்திரம்
உன் முகத்தில் சோகம் வந்தால் தாங்காதம்மா இந்த மனம்
அந்தரத்தில் குடியிருக்கும் ஆண்டவனை பார்த்தேனே
அந்த ஊரை கூட்டி வெச்சு நியாயத்தை நான் கேட்பேனே
விளையாடும் சிறு கலைமானே இதை விதி என்று சொல்வது சரிதானா
விடியாமல் வழக்கும் முடியாமல் அந்த இறைவனை சும்மா விடுவேனா

ஒரு எழை வெச்ச வாழை அந்த வாழை வளரும் வேளை

பூமி தான் நீ நடக்க புன்னியத்தை செய்யலையே
பொன் உதிரும் உன் சிரிப்பை பூக்களை நான் பார்க்கலையே
சிங்கார தேரைப்போலே நீ நடந்து காட்டனுமே
சின்ன குயில் காலகளுக்கு கின்கிணி?? நான் பூட்டனுமே
கலங்காதே மனம் வருந்தாதே வரும் காலம் நமது கேட்டுக்கும்மா
கட்டாயம் அடி உன் மாமன் சொன்னதை செய்வேன் பார்த்துக்கும்மா

ஒரு எழை வெச்ச வாழை அந்த வாழை வளரும் வேளை
அதை காலை ஒடித்தவன் கடவுள் என்பவன் கருணையில்லா கோழை
சொல்லடி கிளியே கிளியே சொன்னது தவறா கிளியே
சொல்லடி கிளியே கிளியே சொன்னது தவறா கிளியே
சொல்லடி கிளியே கிளியே சொன்னது தவறா கிளியே
சொல்லடி கிளியே கிளியே சொன்னது தவறா கிளியே

3 இசை மழையில் நனைந்தவர்கள்:

புதுகைத் தென்றல் said...

தேடி கண்டுபிடிச்சு போட்டுட்டீங்க. மிக்க நன்றி ரவி

Covai Ravee said...

எப்படியோ இணையத்தில் தேடி பிடிச்சிட்டேன் பாட்டு கேட்டீங்களா? இனிமையான பாடல் கேட்டு ரொம்ப நாளாயிற்று. அப்பபோ வருகிறேன். மறுமொழிக்கு நன்றி.

நினைவுகளுடன் -நிகே- said...

ரொம்ப நல்லா இருக்குங்க...