விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே..!

படம்:உரிமைக்குரல்
இசை:மெல்லிசை மன்னர்
இயக்கம்:ஸ்ரீதர்
வரிகள்:கண்ணதாசன்





விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே கதை எழுது...)

மனதில் வடித்து வைத்த சிலைகள்- அதில்
மயக்கம் பிறக்க வைத்த கலைகள்
மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும்
வானத்தை யார் மூடக்கூடும்
உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே கதை எழுது...)

கோவில் பெண் கொண்டது
தெய்வம் கண் தந்தது
பூஜை யார் செய்வது - இந்தப்
பூவை யார் கொள்வது
ஊமைக்கு வேறேது பாஷை?
உள்ளத்தில் ஏதேதோ ஆசை
உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே கதை எழுது...)

தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது
காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது
எண்ணத்தில் என்னென்ன தோற்றம் - என்
நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம்
உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே கதை எழுது...)

7 இசை மழையில் நனைந்தவர்கள்:

VIKNESHWARAN ADAKKALAM said...

விருப்பத்தை நிறைவேற்றியதற்கு நன்றி... எனக்கு இந்த பாடல் மிக பிடிக்கும்...

S.sampath kumar said...

happy newyear we welcome you to join tamilbloggersunit

RAMYA said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நிஜமா நல்லவன்

RAMYA said...

இனிமையான பாட்டை மறுபடியும்
அசை போட வைத்ததிற்கு மிக்க நன்றி

cheena (சீனா) said...

நல்ல பாட்டு - பழைய பாட்டு - ரசித்தேன் - நன்றி பாரதி

TamilBloggersUnit said...

thank u !!!
yes we will add jus you made to join followers.

தேவன் மாயம் said...

காலைவணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..