மதியம் புதன், ஜனவரி 19, 2011

ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுப்போல் வாழ்ந்திடவே


Get Your Own Hindi Songs Player at Music Plugin


ஆசை ஆசையாய் இருக்கிறதே
இதுப்போல் வாழ்ந்திடவே
பாச பூ மழை பொழிகிறதே
இதயங்கள் நனைந்திடவே

நம்மை காணுகின்ற கண்கள்
நம்மோடு சேர கெஞ்சும்
சேர்ந்து வாழுகின்ற இன்பம்
அந்த சொர்கம் தன்னை மிஞ்சும்
ஒரு நாள் கூட இங்கு வரமாகும்
உயிர் எங்கள் வீடாகும்
சுகங்கள் என்றும் இங்கு விளையாடும்
நிரந்தர ஆனந்தம்
(ஆசை..)

நம் தாயின் முகத்தில் ஒரு கோடி கடவுள்
தரிசனம் நாங்கள் பார்த்திடுவோம்
தீபங்கள் கோடி நம் வீட்டில் ஏற்றி
கோவிலை போல மாற்றிடுவோம்
அன்னைக்கு பணிவிடை செய்திடவே
ஜென்மங்கள் வாங்கி வந்தோம்
நம் ஜென்மங்கள் மாறிடும் நேரத்திலும்
சொந்தங்கள் சேர்ந்திருப்போம்
அனைவரின் அன்பில் ஆயுளும் கூடிடுமே
(ஆசை..)

பல நூறு வண்ணம் ஒன்றாக சேறும்
ஓவியம் போல சேர்ந்திருப்போம்
வரலாறு எல்லாம் நம் பேரை நாளை
சொல்வது போல வாழ்ந்திருப்போம்
எங்களுக்குள்ளே வலைந்திடுவோம்
நாணலை போல் தானே
ஒற்றுமை காத்திட நின்றிடுவோம்
தூண்களை போல் நாமே
அடை மழையாக பெய்யும் சந்தோஷம்
(ஆசை..)

படம்: ஆனந்தம்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்: K J ஜேசுதாஸ்