வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்குத் தெரியாது

வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்குத் தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு கிடையாது, அன்புக்கு கிடையாது.
அன்புக்கு கிடையாது.

வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்குத் தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு கிடையாது, அன்புக்கு கிடையாது.
அன்புக்கு கிடையாது.

காவலுக்கு யாருமில்லை
கண்ணீருக்கும் ஈரமில்லை
வீடில்லை கூடும் இல்லை வீதியில் பூமாலை
கங்கையின்னும் காயவில்லை
கருணை இன்னும் சாகவில்லை
நம்பிக்கை என்னும் கையை நீட்டுகிறான் காளை
கப்பல் எங்கே போனால் என்ன?
கட்டுமரம் போதும் நாளை..

வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்குத் தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு கிடையாது, அன்புக்கு கிடையாது.
அன்புக்கு கிடையாது, அன்புக்கு கிடையாது
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்குத் தெரியாது


மொட்டுவிட்ட பாசம் அன்று
காதலாக பூத்தது இன்று சொந்தங்கள்
மலரும் நேரம் யார்தான் அறிவாரோ!
அவள் கண்ணில் ஓரப்பார்வை
இவன் கண்ணில் ஈரப்பார்வை
கண்ணுக்குள் கண்கள் எழுதும் கவிதை
வளர்ப்பாரோ!

வென்மேகமும் பெண்மோகமும் போகும்
வழி காண்பார் யாரோ!


வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்குத் தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு கிடையாது, அன்புக்கு கிடையாது.
அன்புக்கு கிடையாது
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்குத் தெரியாது


படம்: திருமதி ஒரு வெகுமதி
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்5 இசை மழையில் நனைந்தவர்கள்:

ரங்கன் said...

//காவலுக்கு யாருமில்லை
கண்ணீருக்கும் ஈரமில்லை
வீடில்லை கூடும் இல்லை வீதியில் பூமாலை
கங்கையின்னும் காயவில்லை
கருணை இன்னும் சாகவில்லை
நம்பிக்கை என்னும் கையை நீட்டுகிறான் காளை
கப்பல் எங்கே போனால் என்ன?
கட்டுமரம் போதும் நாளை..//

நெஞ்சை தொட்ட வரிகள்..அருமையான பாடல்..அருமையான படமும் கூட..!!

நன்றி தென்றல்...!!

புதுகைத் தென்றல் said...

நன்றி ரங்கா

அமைதிச்சாரல் said...

எனக்கு ரொம்ம்ம்ம்ப பிடிச்ச பாட்ட போட்டு தாக்கிட்டீங்கப்பா.

புதுகைத் தென்றல் said...

நன்றி அமைதிச்சாரல்

Prakaash Duraisamy said...

sindhu nathi poo endra padathil irundu "aathi" endra padalai update seiyungal pls