Get Your Own Hindi Songs Player at Music Plugin
சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி
மோகனப் புன்னகையில் ஓர்நாள்
மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர்
தத்துவம் சொல்லி வைத்தான்.
உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர்
ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன்
கள்ளத்தனம் என்னடி
எனக்கோர் காவியம் சொல்லு என்றான்
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி
வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்.
பள்ளித்தளம் வரையில் செல்லம்மா
பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது
கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே செல்லம்மா ......
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி
படம்: மீண்டும் கோகிலா.
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ் , எஸ்.பி. ஷைலஜா
இசை: இளையராஜா.
வரிகள்: கண்ணதாசன்.
5 இசை மழையில் நனைந்தவர்கள்:
அருமையான பாட்டுங்க,எனக்கு ரொம்பப் பிடிக்கும்.பகிர்ந்ததுக்கு நன்றி
சைலாஜா மேடத்தின் மற்றுமொரு அருமையான பாடல் எப்படியோ ஒரு வழியாக பின்னூட்டம் பார்த்துவிட்டேன். பதிவிற்க்கு நன்றி.
வருகைக்கு நன்றி கார்த்திகா, ரவி
இனிமையான பாடல். மிகவும் ரசித்துக் கேட்டேன்!
இனிமையான பாடல். நான் மிகவும் ரசித்துக் கேட்டேன்!
-அரிமா இளங்கண்ணன்
Post a Comment